மீண்டும் அரசியலில் மாறன்
சென்னை:
பல்டி மன்னர்கள் வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளார் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன்.
திடீரென சில வாரங்களுக்கு முன் தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக முரசொலி மாறன் அறிவித்தார். திமுக தலைவர் கருணாநிதியின்இதயத் துடிப்பு என வர்ணிக்கப்பட்ட மாறன், கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அறிவித்தது பரபரப்பூட்டியது.
தேர்தல் பிரசாரம் தொடங்கவிருந்த நிலையில், மாறனின் இந்த அறிவிப்பு, திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மாறனைசமாதானப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் நடந்தன. கருணாநிதியின் மனைவியும், முரசொலி மாறனின் அத்தையுமான தயாளுஅம்மையாரே நேரில் சென்று மாறனுடன் சமாதானப் பேச்சும் நடத்தினார்.
வேட்பாளர் தேர்வில் அதிருப்தியடைந்ததாலும், மதிமுகவை கூட்டணியிலிருந்து கழற்றி விட்டதாலும் கோபமடைந்தே கட்சிநடவடிக்கைகளிலிருந்து மாறன் விலகி விட்டார் என்று கூறப்பட்டது. மாறனின் திடீர் போக்கால் கருணாநிதியும் கவலைஅடைந்தவராக காணப்பட்டார். இருப்பினும் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
இந்த நிலையில், திடீரென தேர்தல் பிரசாரத்தில் இறங்கி விட்டார் மாறன். சனிக்கிழமை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர்பரிதி இளம்வழுதியை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். இந்தத் தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும்போராட்டம் என்று குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணியை தேர்ந்தெடுப்பதன் மூலம், அதர்மத்தை ஒழிக்க முடியும் என்று கூறிபிரசாரம் செய்தார்.
திடீர் அறிவிப்பு மூலம், அரசியலிருந்து ஒதுங்குவதாக அறிவித்த மாறன், திடீர் என தேர்தல் பிரசராத்தில் குதித்திருப்பது திமுகவினருக்குமகிழ்ச்சியைத் தந்துள்ளது. மற்ற கட்சியினருக்கு மாறனின் முதல் அறிவிப்பே ஒரு ஸ்டண்ட் என நினைக்க வைத்திருக்கிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!