ஈரோடு அரசு மருத்துவமனையில் இளம் பெண் போட்ட வீடியோ.. ஆதார் முகவரி மாற்ற இவ்வளவா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆதார் முகவரி மாற்றம் செய்வதற்கு மருத்துவர் கையொப்பம் பெறுவதற்கு ஒருவருக்கு 300 ரூபாய் லஞ்சம் என பெண்ணிடம் ஒப்பந்த பணியாளர் சொல்லும் வீடியோ பரவி வருகிறது. இது தொடர்பாக அந்த பெண் வெளியிட்ட வீடியோவில், ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்ய வந்தேன், இங்கு ஒரு ஆளுக்கு 300 ரூபாய் கேட்கிறார்கள். முகவரி மாற்றம் செய்து டாக்டரில் கையெழுத்து வாங்கி கொடுக்க இந்த பணம் கேடகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஆதார் கார்ட்டில் முகவரி மாற்றம் செய்வதற்கு அரசு மருத்துவரின் கையொப்பம் பெற பெண் ஒருவர் அணுகியுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் ஒப்பந்த பணியாளர் ஒருவரிடம் கேட்டபோது மருத்துவர் கையொப்பம் பெறுவதற்கு நபர் ஒருவருக்கு 300ரூபாய் ஆகும் என தெரிவித்துள்ளாராம்.

Video Posted by Young Woman at Erode Government Hospital Bribery for Aadhaar Address Change

இதனால் கோபமடைந்த அந்த பெண் வீடியோ பதிவு செய்து அரசு மருத்துவமனையில் முகவரி மாற்றம் செய்ய அரசு மருத்துவமனைக்கு வந்தால் இது போன்று ஏழை எளிய மக்களிடம் பணம் கேட்பது எந்த விதத்தில் நியாயமானது என கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து உறைவிட மருத்துவர் சசிரேகாவிடம் கேட்டபோது, அரசு மருத்துவமனையில் பணம் கேட்பதில்லை அதே போல பணியில் இருந்தவர் பெயர் சீனிவாசன் அவர் ஒப்பந்த பணியாளராக இருக்கிறார், இது குறித்து தகவல் கிடைத்தும் ஒப்பந்த பணியாளர் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர் பேரில் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெரும்பாலும் ஆதார் முகவரி மாற்றம் செய்ய மருத்துவர் கையொப்பம் போடுவதில்லை .. காரணம் குறிப்பிட்ட நபர் அந்த முகவரியில் இருக்கிறார் என்பது மருத்துவர் தெரியாது.. மேலும் இதன் மூலம் பல்வேறு பாதிப்பு காரணமாக மருத்துவ சங்கத்தில் முடிந்த அளவு மருத்துவர் கையொப்பம் போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே மருத்துவ சான்றிதழ் போன்ற உடல்நலம் சார்ந்த பிரச்சினை மருத்துவர் கையொப்பம் போட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வதற்கு அரசு கெஜட்டட் ஆபீசர்களின் கையெழுத்து சில சூழ்நிலைகளில் மட்டுமே தேவைப்படும். உங்களுடைய பெயரிலேயே தற்போதைய முகவரிக்கான வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், மின்சாரக் கட்டண ரசீது , அல்லது வங்கி கணக்கு புத்தகம் (Bank Passbook) போன்ற UIDAI அங்கீகரித்த 40-க்கும் மேற்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால், யாருடைய கையெழுத்தும் தேவையில்லை. அதை வைத்தே ஆன்லைனிலோ அல்லது ஆதார் மையத்திலோ நேரடியாக முகவரியை மாற்றிவிடலாம்.

உங்களிடம் சொந்தமாக எந்தவொரு முகவரி சான்றும் இல்லை, ஆனால் நீங்கள் ஒரு புதிய முகவரியில் வசிக்கிறீர்கள் என்றால், அப்போதுதான் அரசு அதிகாரிகளின் கையெழுத்து தேவைப்படும். அதற்கு உடாய் விதிமுறைகளின்படி, "Certificate for Aadhaar Enrolment/Update" என்ற ஒரு குறிப்பிட்ட படிவம் உள்ளது. அந்தப் படிவத்தில் உங்கள் விவரங்களை நிரப்பி, கீழே குறிப்பிட்டுள்ள அதிகாரிகளிடம் யாராவது ஒருவரிடம் கையெழுத்தும் அவர்களின் அலுவலக முத்திரையும் வாங்க வேண்டும்,

கெஜட்டட் ஆபீசர் - குரூப் ஏ : இதில் அரசு மருத்துவர்கள் , அரசு வழக்கறிஞர்கள் , ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆகியோர் அடங்குவர். இவர்களிடம் கையெழுத்து வாங்கலாம்.

கெஜட்டட் ஆபீசர் - குரூப் பி : வட்டாட்சியர் , அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பிளக் டெவலப்மென்ட் ஆபீசர் போன்றவர்களிடம் கையெழுத்து வாங்கலாம். அதேபோல் நாடாளுமன்ற உறுப்பின , சட்டமன்ற உறுப்பினர் அல்லது நகராட்சி கவுன்சிலர் ஆகியோரிடமும் வாங்கலாம். கிராமப்புறங்களில் கிராம நிர்வாக அதிகாரி அல்லது ஊராட்சி மன்றத் தலைவரிடம் வாங்க முடியும்.

மேற்கண்ட அதிகாரிகள் சான்றளிக்கும் அந்தப் படிவத்தின் ஆயுட்காலம் கையெழுத்திடப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்கள் மட்டுமே. அதற்குள் அதை ஆதார் மையத்திலோ அல்லது ஆன்லைனிலோ பதிவேற்றம் செய்து முகவரியை மாற்றிவிட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+