அதிமுகவினரை வசியப்படுத்த திமுக திட்டம்: ஜெ. எச்சரிக்கை
சென்னை:
அதிமுக பூத் ஏஜென்டுகளை வசியப்படுத்தி, ஏமாற்றி, கள்ள ஓட்டுப் போடுங்கள் என்று திமுகவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே திமுகவினரிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் ஜெயலலிதா பெயரில் திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதில் கை தேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தத் தேர்தலிலும் அவர்கள் கள்ளஓட்டுப் போட முயற்சிப்பார்கள். அவர்களிடம் அதிமுகவினர் மிகவும் உஷாராக இருந்து திமுகவினரின் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்.
இந்தத் தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது என்பதை அதிமுகவினர் மறந்து விடக் கூடாது.
திமுக பூத் ஏஜென்டுகளுக்கு ரகசியப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுக பூத் ஏஜென்டுகளிடம் வசியமாக பழகி, அவர்களைஅவ்வப்போது வெளியே அழைத்துச் சென்று டீ, சாப்பாடு வாங்கிக் கொடுப்பது, பின்னர் அதிமுக ஏஜென்டுகள் வெளியே இருக்கும்போதுஉள்ளே இவர்கள் கள்ள ஓட்டுப் போடுவது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுகவினரின் இந்த சூழ்ச்சியை புரிந்து கொண்டு, அவர்களிடம் ஏமாந்து விடாமல், கழக உடன்பிறப்புகள், எந்தக் காரணத்தைக்கொண்டும் வாக்குப் பதிவு முடியும் வரை வாக்குச் சாவடிகளை விட்டு வெளியே வரக் கூடாது.
தவிர்க்க முடியாத காரணத்தால், வெளியே வர நேர்ந்தால், வேறு யாரையாவது உள்ளே அமர வைத்து விட்டு வெளியே வரவேண்டும். காலையில் மட்டும் சுறுசுறுப்பாக இருந்து விட்டு, மாலையில், மெத்தனமாக செயல்படுவது என்ற போக்கைஅதிமுகவினர் போக்க வேண்டும். தக்க எச்சரிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே திகவினரின் கள்ள ஓட்டுத் திட்டத்தை தடுக்கமுடியும் என்று அதிமுக உடன்பிறப்புகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications