தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக கிராம மக்கள் போர்க்கொடி
சிவகாசி:
தங்கள் தொகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தராததால் கிராம மக்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும்தி.மு.க.மற்றும் த.மா.கா. வேட்பாளர்கள் பிர சாரம் செய்ய கிராம மக்கள் தடை விதித்தனர்.
வெம்பக்கோட்டைக்கு அருகில் இருக்கும் கிராமம் போடுரெட்டிபட்டி. இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளைசெய்து தருமாறு இந்த தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சொக்கரிடமும், பஞ்சாயத்து கவுன்சிலர் விஜயலட்சுமிமற்றும் பல அதிகாரிகளிடமும் இந்த கிராமத்து மக்கள் சில தினங்களுக்கு முன்பு புகார் மனு கொடுத்தனர்.
எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சி தலைவர் சாய்குமாரிடம்புகார் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து 2 போர்வெல் குழாய் அமைப்பதற்காகவும், மேல்நிலை தண்ணீர்தொட்டி கட்டவும் மாவட்ட ஆட்சி தலைவர் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரத்திற்காக இந்த கிராமத்திற்கு சென்றார் தி.மு.க.வேட்பாளர் தங்கராஜ்.அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தர மறுத்த அரசை கண்டிக்கும் விதமாக அவரை தொகுதிக்குள் பிரச்சாரம்செய்ய மக்கள் அனுமதிக்கவில்லை.
தங்கராஜும் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பி சென்றார். த.மா.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்ராஜகோபால் பிரசாரத்திற்கு வந்தபோதும் அவரையும் கிராம மக்கள் பிரச்சாரம் செய்ய தோகுதிக்குள்அனுமதிக்கவில்லை.
ஆனால் ராஜகோபால் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்த பின் அவரை பிரசாரம் செய்ய மக்கள்அனுமதித்தனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications