வென்றால் ராஜினாமா: ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. வேட்பாளர்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் நான் வெற்றி பெற்றால் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக நான் எம்.எல்.ஏ. பதவியைராஜினாமா செய்வேன் என ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
அடுத்தமாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் ஆண்டிப்பட்டி,கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க. பொதுச்செயலாளர்ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.
ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தாலும், இரண்டு தொகுதிகளுக்கு மேலும்வேட்புமனு தாக்கல் செய்தாலும் அந்த வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படக்கூடாது என தேர்தல் ஆணையத்தின்விதிமுறை உள்ளது.
அதன்படி ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருந்ததாலும, நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல்செய்திருந்ததாலும் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்ள் 4 தொகுதிகளிலும் நிராகரிக்கப்பட்டன.
தற்போது ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வன் என்பவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கத் தமிழ்ச்செல்வன்பேசுகையில், ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் 4 தொகுதிகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால் நான்அ.தி.மு.க.சார்பில் போட்டியிடுகிறேன்.
கேரளாவில் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர்பாலகிருஷ்ணபிள்ளையின்வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் தேர்தல் விதிமுறைகள் ஒரே மாதிரி இருக்கவேண்டும். ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும்ஜெயலலிதா போட்டியிடுவார். அதற்காக நான் வெற்றி பெற்றால் என் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications