போலி ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்திய பெண் கைது
சென்னை:
அங்கீகாரம் பெறாமல் போலி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த பெண்ணை சென்னை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை போலீஸ் கமிஷனரிடம், தமிழ்நாடு அரசு ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய டைரக்டர் கண்ணன் ஒரு புகார் கொடுத்தார்.அதில், நந்தனத்தில் போலி ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்தப்பட்டு வருவதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும்கோரியிருந்தார். அதை ஏற்ற போலீஸ் கமிஷனர் காளித்து, தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
கமிஷனர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சாரங்கன், உதவி கமிஷனர் சக்தி வேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையின் விசாரணையில், ஞானம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி என்ற பெயரில் நந்தனம் சி.ஐ.டி.நகர்3-வது மெயின் ரோட்டில் போலிஆசிரியர் பயிற்சிப் பள்ளி நடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்துக் கூறப்படுவதாவது:
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பிரமிளா சந்திரசேகர் என்ற விஜயபானு. 26 வயதான இந்தப் பெண் ஒரு பட்டதாரி. பரங்கிமலையில் உள்ளஞானோதயா ஆசிரியர் பயிற்சிப் பள்ளியின் கிளை என்று கூறி ஞானம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி என்ற பெயரில் நந்தனத்தில் போலி ஆசிரியர்பயிற்சிப் பள்ளியை நடத்தி வந்தார்.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்து வந்தனர்.மாணவிகளிடம் கட்டணமாக, நன்கொடையாக ரூ. 2 லட்சம் வரை வசூலித்துள்ளார். மொத்தம் ரூ. 50 லட்சம் வரை இப்படிமோசடியாக வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த மோசடிப் பள்ளி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இயக்குநருக்குத் தகவல் வந்ததும் அவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.போலீஸார் தற்போது பிரமிளாவைக் கைது செய்துள்ளனர்.
சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் 15 நாள் ரிமாண்ட் செய்யப்பட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications