நாதஸ்வரக் கலைஞர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல நாதஸ்வரக் கலைஞர் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் திங்கள்கிழமை சென்னையில் மாரடைப்பு காரணமாகமரணமடைந்தார்.

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனுக்கு திங்கள்கிழமை நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து அவரதுகுடும்பத்தினர் அவரை, தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சைபலனளிக்காமல் அவர் இறந்தார்.

இறந்த கிருஷ்ணனுக்கு வயது 77. மனைவி, ஏற்கனவே இறந்து விட்டார். 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.சென்னை தூர்தர்ஷன் இயக்குநர் ஏ.நடராஜன், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் மருமகன் என்பதுகுறிப்பிடத்தக்கது.

பத்மபூஷன் உள்ளிட்ட பல உயர் விருதுகளைப் பெற்றவர் கிருஷ்ணன். பல நாடுகளுக்குச் சென்று நாதஸ்வரக்கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

முதல்வர் இரங்கல்:

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+