மாறி விட்டார் மூப்பனார்!
சென்னை:
மூப்பனாரும் மாறி விட்டார். காமராஜர் ஆட்சி என்று கூறி வந்த மூப்பனார் இப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்க வேண்டும்என்று கூற ஆரம்பித்துள்ளார்.
சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த மூப்பனார் உடல் நலம் தேறி தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.சென்னை அடையாறில் திங்கள்கிழமை மாலை தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார்.
அடையாறு கூட்டத்தில் ஆரம்பித்து பூந்தமல்லி கூட்டம் வரையிலான அனைத்துப் பிரச்சாரக் கூட்டங்களிலும் ஜெயலலிதா மீண்டும்முதல்வராக வேண்டும், எம்.ஜி.ஆர். ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர வேண்டும் என்று கோரினார் மூப்பனார்.
1996-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிறந்தபோது, அதன் முக்கியக் கோஷமாக 2001ல் தமிழகத்தில் காமராஜர் ஆட்சிமலரும் என்று கூறப்பட்டது. கட்சி துவங்கிய நாள் முதல் மூப்பனாரும், அவரது கட்சியினரும் எப்போது பார்த்தாலும் இதையேகூறிக் கொண்டிருந்தனர். தங்களால் முடியுமா, இல்லையா என்பது குறித்துக் கவலையில்லை. நிச்சயம் காமராஜர் ஆட்சியை அமைப்போம்என்று கூறி வந்தனர்.
நாளடைவில் கருணாநிதி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி என்று கூறத் தொடங்கினர். காமராஜர் ஆட்சி போலவே கருணாநிதியும் ஆட்சிபுரிகிறார் என்று கூறி எல்லோரையும் அசத்தினார் மூப்பனார். மக்களும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தல் வந்தது. தேர்தல் அறிக்கையை தமிழ் மாநில காங்கிரஸ் வெளியிட்டபோது அனைவருக்கும்ஆச்சரியம். அறிக்கையில் காமராஜர் படம் கூட இல்லை. அறிக்கைக்குள் சென்றால் காமராஜர் ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூடஇல்லை. எல்லாம் காலத்தின் கோலம் என்று நினைத்துக் கொண்டனர் தொண்டர்கள்.
இப்போது எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு மாறி விட்டார் மூப்பனார். ஜெயலலிதாவை முதல்வராக்குவதன் மூலம், தமிழகத்தில் மீண்டும்எம்.ஜி.ஆர். ஆட்சியை மலரச் செய்யுங்கள் என்று வாக்காளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சொல்ல முடியாது, இதற்கு முன்பு நடந்த எம்.ஜி.ஆர். ஆட்சிதான் உண்மையான காமராஜர் ஆட்சி என்று கூறினாலும் கூறுவார்மூப்பனார். எதற்கும் தயாராகவே நாம் இருப்போம்!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications