சென்னையில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்கியது எம்ஆர்எப்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இந்திய கிரிக்கெட் அணியிண் முன்னாள் விக்கெட் கீப்பர்கிர்மானியை பயிற்சியாளராக நியமித்து சென்னையில் தேசிய தென்மண்டல் கிரிக்கெட் பயிற்சி மையத்தைஎம்.ஆர்.எப். நிறுவனம் புதன்கிழமை துவக்கியது.

எம்.ஆர்.எப் நிறுவனம் எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷன் என்ற பெயரில் உலக அளவில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளித்து புகழ் பெற்றது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளித்தவர்ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லில்லி.

இலங்கையில் புகழ் பெற்ற வேகப்பந்து வீச்சாளரான சமிந்தாவாஸ் எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனில் பயிற்சிபெற்றவர். இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளரான ஸ்ரீநாத் எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனில் பயிற்சிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை எம்.ஆர்.எப். நிறுவனத்தின் துணை தலைவரும், நிர்வாக இய்குனருமான கே.எம்.மம்மேன்தென்மண்டல கிரிக்கெட் பயிற்சி மையத்தை சென்னை எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மையத்தில் துவக்கிவைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், இது கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் மேலும்சிறப்பாக ஒளி வீச நல்ல வாய்ப்பு. இதை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எம்.ஆர்.எப். தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றார்.

இந்த பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக, கர்நாடகாவைச் சேர்ந்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்விக்கெட் கீப்பர் எஸ்.எம்.எச் கிர்மானி நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சி மையம் துவக்கி வைக்கப்பட்டபின் கிர்மானி நிருபர்களிடம் கூறுகையில், பயிற்சிக்கு வரும் விளையாட்டுவீரர்களிடையே ஒற்றுமையையும், ஒழுக்கத்தையும் ஏற்படுத்துவதே என் முதல் குறிக்கோள்.

இந்த பயிற்சி மையத்தில் விளையாட்டு வீர்ரகளுக்கு அவர்களிடம் உள்ள சிறுகுறைகளை எவ்வாறு சரி செய்துகொள்வது என்பது பற்றி பயிற்சி அளிக்கப்படும். அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது குறித்தும்பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சி மையத்தின் பயிற்சி ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்சி மையத்தின் பயிற்சியை அடிப்படையாகக்கொண்டிருந்தாலும், இந்திய சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயிற்சி முறையை நான் மாற்றிக் கொள்ள எனக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

இங்கு பயிற்சிக்கு வரும் மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டை பற்றி நன்கு அறிந்தவர்கள்தான். அவர்கள்சிறப்பாக விளையாடுவது எப்படி என்பதற்கு இங்கு பயிற்சி அளிக்கப்படும்.

விக்கெட் கீப்பர்தான் என்றுமே சரியான நீதிபதி. அவர் அணித்தலைவர் போன்றவர். ஒவ்வொரு மண்டத்திலும் 3விக்கெட் கீப்பர் இருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

தமிழ்நாடு கிரிக்கெட் கழக செயலாளர் அசோக் கும்பாட் கூறுகையில், கிர்மானியின் திறமை இளம் விளையாட்டுவீர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

18 வயதுக்கு உட்பட்ட 20 விளையாட்டு வீரர்களுக்கு இரண்டு மாதங்கள் கடும் பயிற்சி அளிக்கப்படும். இதில்சிறந்து விளங்குபவர்கள் தேசிய பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.

சென்ற ஆண்டு நடத்தப்பட்ட தேசிய கிரிக்கெட் பயிற்சி மையத்தின் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.இதில் பயிற்சி பெற்ற இளம் வீரர்களான யுவராஜ்சிங், ஹேமங் பதானி, எஸ் ஸ்ரீராம் போன்றவர்கள் இந்தியஅணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர், மனோதத்துவ நிபுணர் மற்றும் ஒரு யோகா நிபுணர் ஆகியோர் பயிற்சியின்போது கிர்மானிக்கு உதவியாக இருப்பார்கள். முன்னாள் கர்நாடக கிரிக்கெட் விளையாட்டு வீரர் அபிராம்,முன்னாள் தமிழக கிரிக்கெட் அணித் தலைவர் பரத்குமார் ஆகியோர் உதவி பயிற்சியாளர்களாக செயல்படுவார்கள்.

இரண்டு விளையாட்டு வீர்ரகள் தேசிய கிரிக்கெட் பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.ஹைதராபாத்தைச் சேர்ந்த நளின் ரெட்டி மற்றும் தமிழகத்தின் டி.குமரனும் கடைசி நிமிடத்தில் பயிற்சி மையதிதல்சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குமரன் பயிற்சி மையத்தில் சேர்ந்து விட்டார். ரெட்டி புதன்கிழமை மாலை பயிற்சி மையத்தில் சேருவார்.

பயிற்சி மையத்தில் பயிற்சி பெறவிருக்கும் மற்ற விளையாட்டு வீரர்களின் பெயர்கள் வருமாறு:

தீபக் செளகுலே (கர்நாடகா), நளின் ரெட்டி(ஹைதராபாத்), டி.சுமன் (ஹைதராபாத்), ஏ.டி.ராய்டு (ஹைதராபாத்),ஏ.எஸ்.கே. வர்மா (ஆந்திரா), கே. ஸ்ரீநிவாச ராவ் (ஆந்திரா), எச்.டி.சுதிர்ராவ் (கர்நாடகா), விக்ரம் குமார்(தமிழ்நாடு), வினய் உட்டப்பா (கர்நாடகா), மெளசம் நதானியோ ( கேரளா), ஸ்டுவர்ட் பின்னி (கர்நாடகா),செர்பந்தர் யாதவ் (கோவா), சேட்டன் வில்லியம்ஸ் (கர்நாடகா), பி.ஏ.வி.என். ராஜு (ஆந்திரா), எஸ் ஸ்ரீசாந்த்(கேரளா), செந்தில் குமார் (கர்நாடகா), ராய்பி வின்சென்ட் கோமஸ் (கேரளா), டி.குமரன் (தமிழ்நாடு), ஜி. சங்கர்ராவ் (ஆந்திரா), விஷால் குடாவ்லா (தமிழ்நாடு).

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+