வாஷிங்டன் சென்றார் இலங்கை அமைச்சர்
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், நார்வே தூதுக்குழுவினர் பெரும் முயற்சி எடுத்து வரும்இந்நேரத்தில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், வாஷிங்டன் சென்றுள்ளார்.
அங்கு அவர் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது குறித்து பல உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைநடத்துவார் என்று தெரிகிறது.
இதுகுறித்து இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கை:
விடுதலைப்புலிகளின் ஹிட்லிஸ்டில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரின் பெயரும்உள்ளது. அதனால் அவர் வாஷிங்டன் செல்வது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் செல்லும் கதிர்காமர் அமெரிக்காவில் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கதிர்காமரின் வாஷிங்டன் பயணம் தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றுகூறப்பட்டுள்ளது.
இலங்கையில் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் முயற்சி எடுத்து வரும் நேரத்திலும்,இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை நாடும் வகையில் வாஷிங்டன்சென்றுள்ளார் கதிர்காமர் என்பது குறிப்பிடத்தக்கது.
1997 ம் ஆண்டு அமெரிக்காவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது இலங்கைராணுவ வீரர்களுக்கு அதிக அளவில் உதவி செய்து வருகிறது அமெரிக்கா.
மேலும் சண்டையில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ உதவியும் செய்து வருகிறது அமெரிக்கா.
இதற்கிடையே, இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் கனடாதூதர் ரூத் அர்ச்சிபால்டை சந்தித்துப் பேசினார். பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வத்தை வன்னி பகுதியில் சந்தித்துப் பேசி விட்டு புதன்கிழமை கொழும்பு திரும்பினார்.
முன்னதாக அவர் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், எதிர்க்கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கே, இலங்கைக்கான இந்தியத் தூதர் கோ
பால கிருஷ்ண காந்தி ஆகியோரை சந்தித்துப்பேசினார்.
கடந்த வாரம் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை அடுத்து எரிக் சோல்ஹெம்இலங்கை வந்தார். அவர் அடுத்தபடியாக லண்டன் சென்று விடுதலைப்புலிகளின் செய்தித்தொடர்பாளர் ஆண்டன்பாலசிங்கத்தை சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications