ஜெ.வுடன் பிரசாரம் செய்ய விருப்பமில்லை .. சோனியா பயணம் ரத்து
சென்னை:
சிறைத்தண்டனை காரணமாக தேர்தலில் நிற்க முடியாத அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவோடு சேர்ந்து பிரசாரம் செய்வதில்விருப்பம் இல்லாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தனது தமிழக தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்து விட்டார்.
தமிழகத்தில், 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்ய சோனியா வருகிறார் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ரத்துசெய்யப்பட்டு விட்டது. பாண்டிச்சேரியில் மட்டுமே சோனியா காந்தி பிரசாரம் செய்கிறார்.
தற்போதைய புதிய திட்டத்தின் கீழ் கேரளத்தில் பிரசாரம் செய்து வரும் சோனியா அது முடிந்ததும், 8-ம் தேதி பாண்டிச்சேரி வருகிறார்.அங்கு உப்பளம் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதில், மூப்பனார், இளங்கோவன், வாழப்பாடி ராமமூர்த்திஆகியோர் பங்கேற்கிறார்கள். அது முடிந்ததும் அவர் டெல்லி சென்று விடுகிறார்.
சோனியாவின் தமிழக பயணம் ரத்தானதற்கு ஜெயலலிதாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டதால் தேர்தலில் நிற்க முடியாத நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஊழல் புகார் காரணமாகதேர்தலில் நிற்க முடியாமல் போய் விட்ட ஜெயலலிதாவோடு சேர்ந்து பிரசாரம் செய்ய சோனியா விரும்பவில்லை என்றுகூறப்படுகிறது.
மேலும், கடந்த தேர்தலில் தன்னை நெடு நேரம் மேடையில் காக்க வைத்த ஜெயலலிதாவோடு மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்யசோனியா விரும்பவில்லை.
மேலும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 15 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவேதான் வந்து பிரசாரம் செய்தாலும், செய்யாவிட்டாலும் பெரிய மாறுதல் ஏற்படப் போவதில்லை என்றும் சோனியா கருதுவதாகத்தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் தமிழகத்தை புறக்கணித்து விட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications