ஜெ.வேட்புமனு தள்ளுபடி: சதியில்லை, தலைவிதியில்லை சட்டவிதி..ஸ்டாலின்
கரூர்:
ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு கருணாநிதி சதி செய்யவில்லை. அது ஜெயலலிதாவின்தலைவிதியும் இல்லை, சட்ட விதி தான் காரணம் என்கிறார் மு.க. ஸ்டாலின்.
கரூர் மாவட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணித் தலைவர்மு.க ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழத்தில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளோம். அதற்குமுன்பு இருந்த ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தைச் சுருட்டிக் கொண்டனர். அதனால் எந்த வளர்ச்சியும் இல்லாமல்போனது.
எனவே, மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி தொடர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.நாங்கள் தேர்தலுக்கு மட்டுமல்ல, உங்களது சுக, துக்கங்களில் பங்கேற்க எப்போதும் தேடி வருவோம். அந்தஉரிமை எங்களுக்கு உண்டு.
தேர்தலில் நிற்க விடாமல் கருணாநிதி சதி செய்து விட்டார் என ஊர் ஊராகச் சென்று அழுது புலம்பி ஒப்பாரி வைத்துவருகிறார் ஜெயலலிதா. இதில் கருணாநிதி சதி செய்ய ஒன்றுமில்லை. தேர்தலில் நிற்க முடியாமல் போனதுஜெயலலிதாவின் தலைவிதி என்றும் கூற முடியாது.
அவர் ஊழல் செய்ததால் நீதிமன்றம் குற்றவாளி என தீர்மானித்தது. குற்றவாளிகள் தேர்தலில் நிற்க முடியாது என்பதுசட்ட விதி. அதனால் அவரது வேட்பு மனு தள்ளுபடியானது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications