பாலகிருஷ்ண பிள்ளை மனு ஏற்பு: கேரள ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்
கொச்சி:
கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணபிள்ளையின் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது ஏன் என்பது குறித்து தேர்தல்ஆணையம் கேரள உயர்நீதிமன்றத்துக்கு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் பாண்டிச்சேரியில் மே மாதம் 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல்நடக்கிறது.
தேர்தல் ஆணைய விதிமுறைகள்படி, ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஒருவர் 6ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதன்படி, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள்நிராகரிக்கப்பட்டன.
ஆனால் இதே போல் ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்ற கேரளாவில் உள்ள முன்னாள் அமைச்சர்பாலகிருஷ்ணன் பிள்ளையும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை அவர்தாக்கல் செய்த கொட்டாரக்கரா தொகுதி தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, கேரளாவைச் சேர்ந்த பிரபு என்பவர் பொதுநலன் கருதி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். கேரள உயர்நீதிமன்றம் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்அனுப்பியது.
இதற்கு பதிலளித்து தேர்தல் ஆணைய செயலாளர் கே.கே.ராவ் கேரள உயர்நீதிமன்றத்துக்கு விளக்க நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் தண்டனை அறிவிக்கப்பட்ட முதல் 3 மாதங்களுக்குள் கோர்ட்டில்மேல்முறையீடு செய்ய வேண்டும்.
அப்படிச்செய்தால் ஒருவர் ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை பெற்றாலும் அவர் தேர்தலில்போட்டியிடலாம். அதில் தவறில்லை. தண்டனை பெற்ற போது பாலகிருஷ்ணபிள்ளை எம்.எல்.ஏ.வாக இருந்தார்.எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தேர்தலில் போட்டியிட அனுமதி உண்டு. அதுமட்டுமின்றி தனக்கு தண்டனைகிடைத்தவுடன் அவர் முதல் மூன்று மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்து விட்டார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications