தமிழகத் தேர்தலை கண்டு கொள்ளாத இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டு வரும் இவ்வேளையில் இலங்கை இத்தேர்தலில் அக்கறைஇல்லாதது போலவே காட்டிக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும் தமிழகம் மீது ஒரு கடைக்கண் பார்வையை மட்டும் ஆழமாக வைத்து, தேர்தலைக் கவனித்துக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் முன்பெல்லாம் மறைமுகமாகவோவெளிப்படையாகவோ இலங்கை விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

1991 தேர்தலின் போது பிரசாரம் செய்வதற்காகத் தமிழகம் வந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திவிடுதலைப் புலிகளின் மனித குண்டுக்குப் பலியானார்.

இந்தப் படுகொலைச் சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரதான குற்றவாளியாகக்கருதப்பட்ட பின்னர், ரொம்பவும் அடக்கி வாசிக்கத் தொடங்கி விட்டனர் தமிழகத்தின் அரசியல்வாதிகள்.

இந்தத் தேர்தலில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல பல பத்திரிகைகளும் கூட இலங்கைப் பிரச்சினையை எங்கும்உபயோகப் படுத்தவில்லை.

இருந்தாலும் சில அரசியல் கட்சிகள் மட்டும் தற்போதும்கூட விடுதலைப் புலிகளையும் அவர்களுடையகொள்கைகளையும் ஆதரித்து வருகின்றனர்.

1983ஆம் ஆண்டிலிருந்தே விடுதலைப் புலிகளின் சிறந்த புகலிடமாகத் தமிழகம் இருந்து வந்திருக்கிறது என்பதுஎல்லோருக்கும் தெரிந்தது.

இலங்கையையும் தமிழகத்தையும் சிறிய பாக் ஜல சந்திதான் பிரிக்கிறது. இதனால் இரண்டுமே நட்புணர்வைவளர்த்துக் கொள்வதைப் பெரிதும் விரும்புகின்றன.

தவிர, இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினருக்கும் தமிழத்துக்குமிடையே கலாச்சார ரீதியிலான தொடர்பும்இருந்து வருகின்றது.

தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாணப்பட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல அரசியல்வாதிகளும் விரும்புகின்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+