விவசாயிகளுக்காக குரல் கொடுப்போம்: கவுடா
ஊட்டி:
தமிழகத்தில் ஆட்சி அமைக்காவிட்டாலும் விவசாயிகளின் பிரச்னைக்காக குரல் கொடுக்க ஒரு உறுப்பினராவது சட்டசபைக்குச்செல்வோம் என மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவகவுடா ஊட்டியில் தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ஜனதா தாளத் தலைவர் தேவகவுடா ஊட்டியில் பிரச்சாரத்தின் போதுபேசியதாவது:
விவசாயிகள் பிரச்னையை மத்திய மாநில அரசுகள் கவனிக்கத் தவறி விட்டன. விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் பல்வேறுபோராட்டங்களை நடத்தியுள்ளோம். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை விவசாய விரோதக் கொள்கையைக்கடைபிடித்து வருகின்றன.
இவை இருக்கும் வரை விவசாயிகளுக்குப் பெரும் ஆபத்து தான் ஏற்படும். சர்வதேச ஒப்பந்தத்தின்படி இறக்குமதி செய்ய 1429பொருட்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இது விவசாய விலை பொருள்களையும், விவசாயிகளையும் பாதிப்படையச் செய்யும். இந்தியஅளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியிருக்காது.
வாஜ்பாய் அரசு இன்னும் சில மாதங்களில் கவிழ்ந்து விடும். மீடியா இமேஜ் மட்டும் வைத்துக் கொண்டு அரசை நடத்திச் செல்லும்வாஜ்பாய் அரசு நீடிக்காது. தமிழகத்தில் நாங்கள் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்காவிட்டாலும், விவசாயிகளின்பிரச்னைக்காக குரல் கொடுக்க ஒரு உறுப்பினராவது சட்டசபைக்குச் செல்வோம் என தேவகவுடா பேசினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!