அமைச்சர் பொன்முடிக்கு தொகுதியில் எதிர்ப்பு அலை
விழுப்புரம்:
விழுப்புரத்தில் போட்டியிடும் தி.மு.க. அமைச்சர் பொன்முடியை பிரசாரம் செய்ய அனுமதிக்காத மக்கள், அவரதுமனைவியையும் பிரசாரம் செய்ய அனுமதிக்கவில்லை.
இந்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. எல்லாஅரசியல் கட்சிகளும் கொளுத்தும் வெயிலில், வெயிலை மிஞ்சும் அளவுக்கு சூடாக பிரசாரம் செய்து வருகிறார்கள்.
விழுப்புரம் தொகுதியில் தமிழக அமைச்சர் பொன்முடி போட்டியிடுகிறார். அவர் மாவட்டத்தில் நடக்கும்செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் அடிக்கடி சென்று விடுவதால் பிரச்சாரத்தில் முதலில் சற்றுபின்னடைவு ஏற்பட்டது.
பொன்முடியும் அமைச்சர் என்ற அந்தஸ்த்தில் நடந்து கொள்வதால் தொண்டர்களும் சற்று ஒதுங்கி இருந்தேபிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் பொன்முடியை தவிர பா.ம.க. சார்பில் பசுபதி போட்டியிடுகிறார். இவருக்குஆதரவாக பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.
ம.தி.மு.க. சார்பில் பாபு கோவிந்தராஜ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கட்சி தலைவர் வைகோ பிரச்சாரம்செய்துவிட்டு சென்றுள்ளார்.
பசுபதியும், கோவிந்தராஜும் வீதிவீதியாக, வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருறார்கள்.
பொன்முடியை ஆதரித்து முதல்வர் கருணாநிதி, விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன், தி.மு.க.எம்.எல்.ஏவும், நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர், நடிகர் நெப்போலியன், தியாகு, குமரிமுத்து ஆகியோர்பிரச்சாரம் செய்துவிட்டு சென்றுள்ளனர்.
ஆனாலும் அமைச்சர் பொன்முடியை தொகுதியில் பிரச்சாரம் செய்ய மக்கள் அனுமதிக்வில்லை. அவரது மனைவிபிரச்சாரம் செய்யவும் மக்களிடையே எதிர்ப்பு நிலவி வருகிறது.
குறிப்பாக பொய்ப்பாக்கம், காகுப்பம் போன்ற இடங்களில் பொன்முடியின் மனைவிக்கு எதிர்ப்பு நிலவியது. அதைபொருட்படுத்தாது கணவருக்காக அவர் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.












Click it and Unblock the Notifications