விசைப்படகு கடலில் மூழ்கியது: ஒருவர் சாவு
சென்னை:
விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களின் படகு கடலில் மூழ்கியதில் ஒருவர் கடலுக்குள் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்துக் கூறப்படுவதாவது:
சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற ஊமையன். இவரது நண்பர்கள் கதிரவன்,சின்னத்துரை, தேசப்பன். இவர்கள் கடந்த 29 ம் தேதி விசைப்படகு மூலம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
படகு நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது பெரும் புயல் ஏற்பட்டது. உடனே விசைப்படகு கடலில்மூழ்கியது. இதில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இவர்கள் நான்கு பேரும் நீரில் மூழ்கினர்.
இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை ஆறுமுகம் தவிர மீதி மூன்று பேரும் வீடு திரும்பினர். ஆறுமுகம் கடலில்மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரது சடலத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பாக காசிமேடு போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications