அடையாள சீட்டில் சின்னம் கூடாது: தேர்தல் ஆணையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாக்காளர்களுக்குக் கட்சிகள் தரும் துண்டு அடையாளச் சீட்டில் கட்சிகள் தங்கள் சின்னங்களை பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்படும் துண்டு அடையாளச் சீட்டுக்களில்கட்சிகள் தங்கள் சின்னங்களைப் பயன்படுத்தக் கூடாது.

அந்த அடையாளச் சீட்டுக்கள் அனைத்தும் ஒன்றுபோல இருக்க வேண்டும்.

இவற்றில் வாக்காளருடைய பெயர், வாக்காளர் பட்டியல் வரிசை எண், பட்டியலின் பதிவு எண், வாக்குச் சாவடியின்பெயர், வாக்குச் சாவடி வரிசை எண் மற்றும் தேர்தல் நாள் ஆகியவை மட்டுமே அச்சிடப்பட வேண்டும்.

வெள்ளைத் தாளில் நீலம் மற்றும் ராயல் நீல நிறம் கொண்ட மையில் எழுத்துக்கள் அச்சிடப்பட வேண்டும்.

தேர்தல் பிரசாரம் முடியும் நேரம் மாற்றம்:

தற்போதைய தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் மாலை 4 மணிக்கு முடிவடைவதால், அதற்கு 48 மணி நேரத்திற்குமுன்பாகத் தேர்தல் பிரசாரம் முடிவடைய வேண்டும்.

இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை வரும் மே மாதம் 8 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியுடன் முடித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் அதற்கு அப்புறம் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பதற்குத் தடை இல்லை.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முறையே தங்களுடைய எம்.பி.மற்றும் எம்.எல்.ஏ. அடையாள அட்டைகளைக் காட்டியும் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+