சட்டசபைத் தேர்தல்: வாஜ்பாய் அரசுக்கு பாதிப்பில்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் நடக்கும் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வாஜ்பாய் அரசுக்கு பாதிப்பைஏற்படுத்தாது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் குறித்த விவரம்:

தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 10ம் தேதி சட்டசபைத்தேர்தல் நடக்கிறது. இந்த ஐந்து மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றியைத் தவற விட்டாலும் அது மத்தியில்வாஜ்பாய் அரசுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

1999 ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக 3 வது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு பலமுட்டுக்கட்டைகள் ஏற்பட்டது. அதையெல்லாம் அவர் தாண்டி விட்டார். தற்போது அவருக்கு 5 மாநிலங்களில்நடக்கும் தேர்தல் பெரிய அளவில் பிரச்சனையைக் கொடுக்காது என நம்பலாம்.

இந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜக 5 மாநிலங்களிலும் பல தொகுதிகளில் வேட்பாளர்களைநிறுத்தியுள்ளது. தமிழகத்திலும், கேரளாவிலும் பாஜக வேட்பாளர்களுக்கு வெற்றிமுகம் இருப்பதாகவே தெரிகிறது.

ஆனால் பாண்டிச்சேரியில் பாஜக வளர்ந்து வரும் நிலையில் இருப்பதால் அங்கு பாஜகவின் வெற்றியை எதிர்பார்க்கமுடியாது. அதே போல் அசாமில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் என்று கூற முடியாது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 5 மாநிலத் தேர்தல் குறித்து கணிப்பு நடத்திய பிரேம் சங்க் ஜா கூறுகையில், எதிர்க்கட்சியினர் தேர்தல்பிரசாரங்களில் கூறுவது போல், வாஜ்பாய் அரசுக்கு இந்தத் தேர்தலால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தெஹல்கா டாட் காம் வெளிப்படுத்திய ஆயுதப்பேர ஊழல் வழக்கைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள், வாஜ்பாய்அரசு கவிழ்ந்து விடும் என்று கூறுவது தவறு.

பாஜக கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் அதிக இடங்கள் கிடைக்காவிட்டாலும் கூட அதுவே வாஜ்பாய் அரசுகவிழ்வதற்கு காரணமாக அமைந்து விடாது என்று கூறினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+