கருணாநிதி மீது வீசும் ஆத்திர அலை: வீரமணி கிண்டல்

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழகத்தில் கருணாநிதி மீது ஆத்திர அலை வீசுகிறது என திராவிட கழக பொதுச்செயலாளர் கி.வீரமணிதெரிவித்தார்.

கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திராவிடக் கழகப் பொதுச் செயலர் கி.வீரமணி கூறியதாவது:

கேரளாவில் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பாலகிருஷ்ணனின் வேட்பு மனு ஏற்றுக் கொண்டுள்ளனர்.ஜனநாயக நாட்டில் அங்கு அவர்களுக்கு ஒரு சட்டம், தமிழகத்தில் ஒரு சட்டமா? கடந்த 97 ம் ஆண்டு தான்ஜெயலலிதாவின் வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட பின்னர், 4 மாதங்களுக்குப் பின்னர் தேர்தல் கமிஷன் குற்றவாளிகள்தேர்தலில் நிற்கக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதிலிருந்து இது அவரது திட்டமிட்ட சதிஅம்பலமாகியுள்ளது.

சிறை சென்ற சிதம்பரம்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சிதம்பரம் திமுக ஆட்சியை எதிர்த்து சிறை சென்றார். அப்போது திமுகஆட்சியை மக்கள் விரோத ஆட்சி என வர்ணித்த சிதம்பரம், இப்போது பொற்கால ஆட்சி எனக் கூறி வருகிறார்.முரண்பாட்ட கருத்துக்களையே சிதம்பரம் கூறி வருவது வியப்பிற்குரியது.

ஜெயலலிதா முதல்வராக முடியாது, அவரை கவர்னர் முதல்வர் பதவிக்கு அழைக்க மாட்டார் என அகிலஇந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறி வருகிறார். அவர் தமிழக ஆளுநரைஜெயலலிதாவை முதல்வர் பதவிக்கு அழைக்கக் கூடாது மறைமுகமாக மிரட்டுவதாக உள்ளது என்றார் வீரமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+