For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற விவாதம் தான் தமிழகத்தின் டீ கடை முதல் பெரும் கிளப்புகள் வரை அலசப்படுகிறது. யாரைத்தேர்வு செய்யப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பதை விட, யார் முதல்வராகப் போகிறார்கள் என்பதே மக்களின்எதிர்பார்ப்பாக உள்ளது.

திமுக ஜெயிக்குமா, அதிமுக வெல்லுமா? என்ற கேள்வியே இப்போது பிரதானமாக உள்ளது. இதற்கான விடையை எல்லோரும்தேடிக் கொண்டிருக்கின்றனர். ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்னர் தான் இந்த வினாவிற்குத் தெளிவான விடை கிடைக்கும் என்பதில்சந்தேகமே இல்லை.

தேர்தல் அறிவிப்பிற்கு முன்னர் உருவான அதிமுக, திமுக கூட்டணிகள், தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் வேறு விதமாகப் பல்வேறுகோணங்களில் மாறி விட்டன. இரு அணிகளுமே இப்போது சம பலத்துடன் மோதுகின்றன. அலை எதுவும் வீசவில்லை என்பதால்இப்போதைய கணிப்புகள் எல்லாம் வேறு விதமாக மாறி வருகின்றன. சில ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசம் மட்டுமே அணிகளின்வெற்றியை தோல்வியைத் தீர்மானிக்கும் அம்சமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆரம்ப காலகட்டத்திலும், ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்ட சமயத்திலும், ஜெயின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டபோதும்அதிமுகவிற்கு ஆதரவான அலை வீசியது என்பது உண்மையே. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் அதனால் அனுதாப அலை வீசும்என எதிர்பார்த்த அதிமுகவிற்குப் பெரிதும் ஏமாற்றமே மிஞ்சியது. வேட்பு மனு நராகரிப்பால் மக்களிடையே எந்தவித அனுதாபமும்கிடைக்கவில்லை.

பிரச்சாரத்தின்போது இந்த வேட்பு மனு நிராகரிப்பு விஷயத்தை கருணாநிதியின் சதி எனக் குற்றம் சாட்டினாலும், மக்கள் அந்தப்பேச்சில் மயங்கி விடவில்லை என்பது தான் உண்மை. ஆனால், தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவைக் காண கூட்டம்அலைமோதுகிறது. அவருக்கு இது அனைத்தும் ஓட்டாக மாறிவிடும் எனச் சொல்லி விட முடியாது. திரண்டிருந்த மக்கள் கூட்டம்,ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மாறி விடாது.

திமுக இந்த முறை அடக்கியே வாசிக்கிறது என்று சொல்லலாம். எதிரணியின் குற்றச்சாட்டுகளுக்கு கருணாநிதி அளித்த நிதானமானபதில்கள் மக்களைக் கவர்ந்துள்ளன. வீணாண குற்றச்சாட்டுக்களையோ, அநாவசியமான வார்த்தைகளையோ கொட்டாமல்,மக்கள் மீது நம்பிக்கையோடு கருணாநிதி சற்று நிதானமாகவே பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார்.

கடந்த தேர்தல் வரை எழுந்து நின்று பேசிய கருணாநதி, இப்போது தள்ளாத வயதிலும் இளமையான குரலில் நாற்காலியில்அமர்ந்தபடியே பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது பேச்சிலும், ஆட்சியின் சாதனைகளே அதிகம் இடம் பெற்றன.

ஒவ்வொரு அணித் தலைவர்களும் என்ன பேசி வருகின்றனர் என்பதை தமிழக மக்கள் உன்னிப்பாகக் கவனிக்காமல் இல்லை.கருணாநிதி எடுத்துக் கூறிய சாதனைப்பட்டியல்கள் மக்கள் மனதில் ஓரளவு இடம் பிடித்துள்ளன. அலையே இல்லாத இந்த தேர்தலின்முடிவு சமபலத்தைக் கொடுத்து கூட்டணி ஆட்சியைத் தமிழகத்தில் ஏற்படுத்தும் என்பது தான் அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.யாருக்கும் பெரும்பான்மை இருக்கப் போவதில்லை என்ற கூற்றும் உண்மையாக வாய்ப்புள்ளது.

அதேசமயம், 3 வது அணியாக உருவெடுத்துள்ள மதிமுகவால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்குப் பாதிப்பு உருவாகுமா என்பதுதேர்தல் முடிந்த பின்னர்தான் தெரியும். மதிமுக பிரிந்து சென்றதால், இந்த அணிக்கு கிடைக்காமல் போகும் சில ஆயிரம் ஓட்டுக்களேவெற்றியை தோல்வியை நிர்ணயிப்பதாக இருக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X