For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்.- அ.தி.மு.க கூட்டணி தேர்தலுக்கு பின்னும் தொடரும்: இளங்கோவன்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

அ.தி.மு.கவுடனான காங்கிரஸ் கூட்டணி தேர்தலுக்குப் பின்னும் தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில், தமிழ் மாநில காங்கிரசையும், காங்கிரசையும்இணைக்கும் முயற்சியில் தொடர்ந்து நான் ஈடுபடுவேன்.

தமிழகத்திலுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரசுக்கு 14 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டதில்வருத்தமடைந்துள்ளனர். ஆனாலும்கூட அவர்கள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காகபாடுபட்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தமிழகத்தில் பிரச்சாரம் செய்யாததற்கு காரணம் ஜெயலலிதா 1999ம் ஆண்டுதேர்தலின் போது சோனியாவுடன் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாததற்கு பழி வாங்கும் நடவடிக்கை என கூறுவதுமுற்றிலும் தவறானது.

பாதுகாப்பு காரணங்ளும், நேரமின்மையுமே அவர் தமிழக பிரச்சாரத்தில் பங்கேற்காததற்கான காரணம். வேறு எந்தகாரணமும் இல்லை.

திங்கள்கிழமை சென்னை கடற்கரையில் வாஜ்பாய் கலந்து கொள்ளும் கூட்டம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இல்லை.

இந்த கூட்டம் வாஜ்பாய், கருணாநிதி இருவருக்கும் விடையளிக்கும் கூட்டம். ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்தஇடங்களில் எல்லாம் அவருக்கு மக்கள் ஆதரவு அதிகமாக காணப்பட்டது. அ.தி.மு.க கூட்டணி இந்த தேர்தலில்நிச்சயம் வெற்றி பெறும் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார்.

த.மா.கா. தலைவர் மூப்பனார், ஜெயலலிதாவையும், காமராஜரையும் ஒப்பிட்டதை சிதம்பரம் குறை கூறியுள்ளார்.அவருக்கு காமராஜரைப் பற்றி என்ன தெரியும். அவருடைய த.மா.கா. ஜனநாயக பேரவை தி.மு.கவுடன் உறவுகொண்டுள்ள கட்சி. அதனால் காமராஜைப் பற்றி பேச சிதம்பரத்திற்கு எந்த தகுதியும் கிடையாது என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X