‘கண்மணி அன்போடு’ கெனிஷாவுடன் மேடையில் ரவி மோகன் டூயட்.. ஒரே வரியில் ஆர்த்தி ரவி ‘பஞ்ச்’ போஸ்ட்
சென்னை: நடிகர் ரவி மோகன், சமீப காலமாக தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொது நிகழ்ச்சிகள் காரணமாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். ஒருபுறம் அவரது விவாகரத்து விவகாரம் பேசப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடனான நெருக்கம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

கண்மணி அன்போடு
சமீபத்தில் நடந்த ஒரு மேடை நிகழ்ச்சியில், ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் இணைந்து குணா படத்தில் இடம்பெற்ற "கண்மணி அன்போடு காதலன்..." பாடலை ரீ-கிரியேட் செய்தனர்.
அதில் கமல்ஹாசன் பேசும் வசனங்களைப் போல ரவி மோகன் தனது ஸ்டைலில் சொல்ல, பாடகி எஸ். ஜானகி பாடிய பகுதிகளை கெனிஷா பாடினார். பாடல் முடிவில் கெனிஷாவை ரவி மோகன் அணைத்துக் கொண்ட காட்சி ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. சிலர் இந்த காட்சியை ரசித்தாலும், "இந்த பாடலை மேடையில் பயன்படுத்த இளையராஜாவிடம் அனுமதி பெற்றீர்களா?" என்று கலாய்த்து வருகின்றனர்
கோவில் விழாவில் நெகிழ்ச்சி
அதே நேரத்தில், கேரளாவில் உள்ள மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் விழாவில் கலந்து கொண்ட இருவரும் மீண்டும் கவனத்தை ஈர்த்தனர். இந்த நிகழ்ச்சியில், கெனிஷா மேடைக்கு செல்லும் முன் ரவி மோகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது அங்கு இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் மேடையில் பாடியதும், அவரை பாட அழைத்ததும், இருவரின் நெருக்கம் குறித்து மீண்டும் பேச வைத்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, கெனிஷா பிரான்சிஸ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவில், "நேற்று இரவு மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலின் நிகழ்ச்சியில் பங்கேற்றது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்றாக இருந்தது. சில வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மரியாதையாகும்.
இது ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல; என் வாழ்க்கையின் முக்கியமான ஆன்மீக அனுபவமாக உணர்ந்தேன். என்னை அறிந்தவர்கள் அனைவரும் அறிவார்கள் - ஆன்மீகம் என்னை எவ்வளவு ஆழமாக தொடுகிறது என்பதை. தேவியின் சன்னிதியில் பாடிய அந்த தருணம் மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், தெய்வீகமாகவும் இருந்தது.
வாழ்க்கை எதை எங்கள் முன் வைத்தாலும், மேடை வெளிச்சம் ஏறியதும் நம்மால் முடிந்ததை முழுமையாக செய்து, கிடைக்கும் வாய்ப்புக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதைக் இந்த அனுபவம் உணர்த்தியது. நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க வேண்டும்... நம்பிக்கையும் அதேபோல் தொடர வேண்டும்.

இந்த கோவிலுக்கு நாங்கள் பலமுறை பக்தர்களாக வந்துள்ளோம். மனம் உருகி வேண்டினால், அம்மன் அதை பல மடங்கு திருப்பித் தருவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்குள்ள ஆற்றலும், மக்களின் அன்பும் எங்களை என்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
எங்களை இவ்வளவு அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் நன்றி. இந்த அனுபவத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்கும் நன்றி. என்னுடன் எப்போதும் துணையாக இருக்கும் என் நண்பர்களுக்கு என் அன்பு." என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுடன், ரவி மோகனுடன் மேடையில் பாடிய வீடியோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
ஆர்த்தியின் இன்ஸ்டா ஸ்டோரி
இதே நேரத்தில், ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மதர்ஸ் டே தினத்தையொட்டி, தனது மகன்கள் கொடுத்த பரிசை பகிர்ந்துள்ளார். இந்த பதிவைப் பார்த்த இணையவாசிகள் பலரும், "கணவர் இல்லாவிட்டாலும், உங்கள் மகன்கள் உங்களுடன் இருக்கிறார்கள்" என்று ஆறுதல் தெரிவிக்கும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
பழனியில் செய்தியாளர் கேட்ட கேள்வி, கடுப்பான ரவி மோகன்.. எதிர்பாராத செயல்! குவியும் கருத்து -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications