அரியாசனம் யாருக்கு?
சென்னை மாவட்டத்திலும் கூட திமுகவுக்கு சில சிக்கல்கள் உள்ளன. சென்னையில் உள்ள பலதொகுதிகளில்திமுகவினரிடையே அதிருப்தி நிலவுகிறது. வழக்கமாக சென்னையை திமுகவின் கோட்டை என்பார்கள். ஆனால்இந்த முறை கோட்டை கலகலக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சைதாப்பேட்டை,திருவொற்றியூர், எழும்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவினர் அதிருப்தி அல்லது வருத்தத்தில் உள்ளனர்.
சைதாப்பேட்டை தொகுதியில் அத்தொகுதி திமுகவினரின் தளபதி சைதை கிட்டு போட்டியிடதாதால்,தொண்டர்கள் சோர்வுடன் உள்ளனர். வை. பெருமாளுக்கு ஆதரவாக வாக்கு கேட்பதில் அவர்கள் ஆர்வம்காட்டவில்லை. இருப்பினும் திமுக தோற்றால் செம டோஸ் கிடைக்கும் என்று தலைமை எச்சரிருப்பதால்அரைகுறை மனதுடன் வேலை செய்து வருகிறார்கள்.
அதே போல திருவொற்றியூர் தொகுதியில் குமரி அனந்தனுக்கு ஆதரவாக அவரும், அவரது குடும்பத்தினரும், பிறகூட்டணிக் கட்சியினருமே பிரசாரம் செய்து வருகிறார்கள். திமுகவினர் அமைதியாக இருந்து வருகின்றனர்.
உளவுப் பிரிவு தகவல்களின்படி திமுகவுக்கு எதிராக தமிழகத்தில் பெரிய அளவில் எதிர்ப்பு அலை இல்லை என்றும்இருந்தாலும் கூட ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிப்பு விவகாரத்தில் திமுக அரசு இருப்பதாக மக்கள்நம்புகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. மேலும், ஜெயலலிதாவை திட்டமிட்டே திமுக மற்றும் பிற கட்சிகள்தேர்தலில் போட்டியிடாத வகையில், சரியான வழக்கில் தண்டனை கிடைக்கச் செய்துள்ளனர் என்றும் ஒரு கருத்துவலுவாக நிலவி வருகிறது.
கொஞ்சம் சிரமப்பட்டால் மட்டுமே வெற்றி என்ற நிலை இருப்பதால் திமுகவும் தனது தரப்பு பிரசாரத்தை மிகவும்கடுமையாக்கி உள்ளது. மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள சித்தி ராதிகாவை முழுமையான சுற்றுப்பயணத்தில்இறக்கி விட்டுள்ளது. மறுபுறம் கோடீஸ்வரன் சரத்குமார் சுழன்று வருகிறார். டிவி பிரசாரத்திலும் திமுகவேதீவிரமாகியுள்ளது. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மறக்க முடியுமா என்று கேட்டு அதிமுகஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தி வருகிறார்கள் திமுகவினர்.
திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே இந்த நிமிடம் வரை தெளிவாக இருக்கிறது. இருப்பினும்அதிமுகவுக்கும் நல்ல வாய்ப்புகள் உள்ளன. போன தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்தபோது,யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று கேட்டபோது டூப் அடித்து விட்டுப் போனவர்கள் நமது வாக்காளர்கள்என்பதை மறக்க முடியுமா?
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications