வாஜ்பாய் இன்று சென்னையில் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணித்தலைவரும், பிரதமருமான வாஜ்பாய் திங்கள்கிழமை சென்னை வருகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக மற்றும் பிற கட்சிளுக்கு ஆதரவாக தேசியத்தலைவர்கள் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் பலர் இதுவரை தமிழகத்தில் பிரச்சாரம்செய்துள்ளனர். தற்போது பிரதமர் வாஜ்பாய் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில், திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு வாஜ்பாய் கலந்து கொள்ளும் பிரச்சாரக்கூட்டம் நடக்கவுள்ளது. இதற்காக கேரளத்தில் பிரச்சாரத்தை முடித்து விட்டு மாலையில் சென்னை வருகிறார்பிரதமர்.

விமான நிலையத்தில் ஆளுநர் பாத்திமா பீவி, முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் அவரைவரவேற்கிறார்கள். பின்னர் ராஜ் பவனில் சிறிது ஓய்வுக்குப் பின் கூட்டம் நடக்கும் மெரினா கடற்கரைக்கு வாஜ்பாய்வருகிறார். பிரச்சாரக் கூட்டத்தில், கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

அன்பழகன், மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன், சென்னை மேயர் மு.க.ஸ்டாலின், பாரதீயஜனதாக் கட்சித் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி, மத்திய அமைச்சர் வெங்கய நாயுடு, ஆர்க்காடு வீராசாமி,ப.சிதம்பரம், தமிழக பாரதீய ஜனதா பொதுச் செயலாளர் இல. கணேசன், திருநாவுக்கரசு, ஆர்.எம்.வீரப்பன், டாக்டர்கிருஷ்ணசாமி, திருமாவளவன், குமரி அனந்தன், ஜே.எம்.ஹாரூண், ஏ.சி.சண்முகம் மற்றும் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

பிரதமரின் சென்னை வருகையையொட்டி சென்னை நகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாஜ்பாய் பேசுவதற்காக கடற்கரை சீரணிஅரங்கில் குண்டு துளைக்காத மேடை அமைக்கப்பட்டு வருகிறது. கடற்கரைப்பகுதி முழுவதிலும் தீவிர ரோந்துப்பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+