101 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மே 13ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் முழுவதும் 101 மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி கூறினார்.

இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதிலுமுள்ள 234 தொகுதிகளுக்கும் திருச்சி மக்களவைக்கும் சேர்த்து 56,285 மின் வாக்குப்பதிவுஎந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

தமிழகம் முழுவதும் 4 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்களின் எண்ணிக்கை 2 கோடியே38 லட்சம் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 2 கோடியே 36 லட்சம்.

தேர்தல் பணிகளுக்காக மொத்தம் 3 லட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். 89,085 பேர் பாதுகாப்புப் பணிகளுக்காகஈடுபடுத்தப்படுவார்கள்.

மே 10ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும்.

மே 13ஆம் தேதி அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகும். பிற்பகல் 1 மணிக்குள் தேர்தல்முடிவுகள் தெரிய வரும் என்றார் சாரங்கி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+