பிரச்சாரம் ஓய்ந்தது .. வியாழக்கிழமை வாக்குப்பதிவு
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்தது. மே 10ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது.
தமிழக சட்டசபைக்கு மே 10-ம் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது. பாண்டிச்சேரி சட்டசபைக்கும் அன்றே தேர்தல்நடக்கிறது. இதற்கான தேர்தல் பணிகள் ஏப்ரல் 16ம் தேதி துவங்கியது. அன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.தேர்தல் பிரசாரம் அன்றே பல கட்சிகளால் துவக்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் முடிவடைந்தது.மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 4 மணியுடன் மைக் ஓசைகள் ஓய்ந்தன. ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓய்வுக்குச்சென்றன. வாக்காள பெருமக்களே, வாக்களிப்பீர் என்ற முழக்கம் ஓய்ந்தது.
4 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறைத்தண்டனை என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருப்பதால் 4மணிக்கு மேல் தேர்தல் பிரசாரத்தை எங்குமே காண முடியவில்லை.
கடைசி நாளான செவ்வாய்க்கிழமை சென்னையில் முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் கடைசி நிமிஷ பிரசாரத்தில்இறங்கினர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல் முறையாக சென்னையில் பிரச்சாரத்தில்ஈடுபட்டார். இதுவரை சென்னையில் பிரச்சாரமே அவர் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலினும் செவ்வாய்க்கிழமை நகர் முழுவதிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications