ஜெயலலிதாவின் வாழ்வா! சாவா! பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

Jayalalithaஇத் தேர்தலில் மக்கள் தரும் முடிவில்தான் அதிமுக கூட்டணியினரின் எதிர்காலமே இருக்கிறது.

முதலில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்று தெரியாமல் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல்மக்களும் நீண்ட நாட்களாக முழித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனால், இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்ற ஆணித்தரமான நினைப்பை மனத்தில்நிறுத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தன் கூட்டணிக்கு யார் வந்தாலும்ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுடன் இருந்தார்.

அடிக்கடி தங்களுடைய கூட்டணியில் பாதிப்பு வந்தாலும், "உன்னை விட்டால் எனக்கு யாருமில்லை" என்கிறபாணியில் தமிழக காங்கிரஸ் அதிமுகவை நாடி ஓடி வந்தது. கிடைத்தவரை லாபம் என்ற நினைப்புடன் தங்களுக்குக்கிடைத்த 14 தொகுதிகளையும் பெருந்தன்மையோடு பெற்றுக் கொண்டது தமிழக காங்கிரஸ்.

திமுகவை விட்டு விலகிவிடும் என்று அனைவராலும் நீண்ட நாட்களாகவே நினைக்கப்பட்டு வந்த பாட்டாளி மக்கள்கட்சி யாருடைய நினைப்பையும் பொய்யாக்கவில்லை. விலகி வந்த பாமக, அதிமுகவுடன்தான் சேரும் என்பதும்எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றே.

ஜெயலலிதாவுக்கு உடன் பிறவா சகோதரரானார் ராமதாஸ். பாமகவுக்கு 27 தொகுதிகளை அள்ளிக் கொடுத்தார்ஜெயலலிதா.

அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) "இப்போ சேருமா அப்போ சேருமா" என்று பெரும் பரபரப்புடன்எதிர்பார்க்கப்பட்டது. தொகுதிப் பங்கீடு காரணமாகவே இக்கூட்டணி முயற்சி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா? அந்த நாளும் வந்தது. 32 தொகுதிகள் கிடைத்த கையோடு அதிமுகவுடன்சேர்ந்துவிட்டது தமாகா.

மதச்சார்பு கட்சியான பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) எதிர்க்கும் ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமேஅதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டன இந்தியக் கம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிகள். இரண்டும்தலா 8 தொகுதிகளோடு அதிமுக கூட்டணியில் இணைந்தன.

இவை போக, இந்திய முஸ்லிம் லீக், ஃபார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதிகளைப் பெற்று, அதிமுககூட்டணியில் ஐக்கியமாகின.

அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதிகளைப் பங்கீடு செய்தபின், 142 தொகுதிகளைத் தன்வசம் வைத்துக்கொண்டு, தேர்தல் களத்தில் குதித்தது அதிமுக.

மார்ச் மாத இறுதியிலேயே தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது அதிமுக. "நானே அடுத்த முதல்வர்" என்றபெரும் கோஷத்துடன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் ஜெயலலிதா.

இதற்கிடையே, ஜெயலலிதா தேர்தலில் போட்டி போட முடியுமா என்ற சந்தேகம் ஜெயலலிதாவுக்குக் கூட இருந்துவந்தது.

டான்சி நிலபேர வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனையும் சசி என்டர்பிரைசஸ் வழக்கில் 2 ஆண்டுசிறைத்தண்டனையும் பெற்றார் ஜெயலலிதா. இந்தத் தீர்ப்புகளை தனி நீதிமன்றம் வழங்கியது.

இதை எதிர்த்து ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தேர்தலில்போட்டியிடலாம் என்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியது.

சந்தோஷமடைந்த ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துச் சுறுசுறுப்பாகப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.

இதற்கிடையே ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தன்னுடைய வேட்புமனுக்களைத் தாக்கல்செய்தார்.

ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி ஆகுமா ஆகாதா என்று அனைவரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக, மனுத்தாக்கலின் கடைசி நாளன்று புதுக்கோட்டை,புவனகிரி ஆகிய தொகுதிகளிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+