தொலைபேசி மூலம் வாக்கு சேகரித்த தாமரைக்கனி

Subscribe to Oneindia Tamil

வத்திராயிருப்பு:

ஸ்ரீவில்லிப்புத்தூரில் சுயேட்சையாக போட்டியிடும் தாமரைக்கனி வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரம்செய்து வருகிறார்.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் கட்-அவுட், பளபளக்கும் பல வண்ண நோட்டீஸ், காதை செவிடாக்கும்ஒலிபெருக்கிகள் போன்றவற்றிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதால் வேட்பாளர்கள் வீதிவீதியாக,வீடுவீடாக போய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தாமரைக்கனி புதுவிதமான முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தான் வீட்டில் இருக்கும்போது டெலிபோன் டைரக்டரியில் தன் தொகுதியில் இருக்கும் அனைத்து எண்களையும்எடுத்து அவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு. அண்ணாச்சி இருக்காகளா? என தொடங்கி வீட்டில்இருக்கும் அனைவரின் நலனையும் விசாரித்து வாக்காளர்களை சென்டிமென்ட்டாக டச் செய்கிறார்.

அதன்பின் 20 ஆண்டுகளாக தான் எம்.எல்.ஏவாக இருந்து செய்த சாதனைகளை கூறி தனக்கு வாக்களிக்கும்படிகேட்டுக் கொள்கிறார்.

தாமரைக்கனியால் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப்பட்ட அனைவரும், தாமரைக்கனி என்னுடன்தொலைபேசியில் பேசினார் என மற்றவர்களிடம் கூறி வருகின்றனர்.

இதனால் தாமரைக்கனிக்கு பெரும் விளம்பரம் கிடைத்துள்ளது. தாமரைக்கனியின் இந்த வித்தியாசமான பிரச்சாரம்அவருக்கு பலனளிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+