அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் - வாக்களித்தோரிடம் கருத்துக்கணிப்பு
டெல்லி:
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 1 சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்றுதிமுக கூட்டணியைவிட முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.
இன்று வாக்களித்துவிட்டுத் திரும்பியவர்களிடம் இந்தியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பின் விவரம்:
மொத்த வாக்குகளில்,
48 சதவீதத்தை அ.தி.மு.க. கூட்டணி பெற்றுள்ளது
திமுக கூட்டணி 47 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது
பிற கட்சிகள் 5 சதவீதத்தைப் பெற்றுள்ளன
கிடைக்கும் இடங்கள்:
இந்த வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால்,
அ.தி.மு.க. கூட்டணிக்கு 125 இடங்கள் கிடைக்கும்
திமுக கூட்டணிக்கு 105 இடங்கள் கிடைக்கும்
பிற கட்சிகளுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 234. ஆட்சி அமைக்க 117 இடங்கள் வேண்டும்.
இந்தக் கருத்துக் கணிப்பின் அடிப்படையில் பார்த்தால், யார் கையில் ஆட்சி என்பது வெறும் 1 சதவீத வாக்குகளில்தான் அடங்கியிருக்கிறது.
கருத்துக் கணிப்பில் ஏதாவது ஒரு சிறிய தவறு நடந்திருந்தாலும் (மார்ஜின் ஆப் எரர்) கூட அது தவறானமுடிவையே காட்டும்.
எனவே, மிகச் சிறிய அளவிலேயே வாக்கு வித்தியாசம் இருப்பதால் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரைகாத்திருப்பது தான் சரியாக இருக்கும் என தூர்தர்ஷன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications