அசாம்: தீவிரவாதி கொலை- ஏஜன்ட் கடத்தல்-வாக்குச்சீட்டுக்கள் பறிப்பு
கவுஹாத்தி:
சட்டசபைத் தேர்தல் நடைபெறும் அசாம் மாநிலத்தில் போலீஸார் மீது குண்டு வீச முயன்ற தீவிரவாதியைப்போலீஸார் சுட்டுக்கொன்றனர்.
இதே போல் வாக்குச்சாவடி ஒன்றில் பூத் ஏஜன்ட் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கடத்திச்சென்றது.
இந்தியாவின் பதட்டம் நிறைந்த வடகிழக்கு மாநிலமான அசாமில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுஆரம்பமானது.
முதலில் மிகவும் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு நேரம் ஆக, ஆக சூடு பிடிக்க ஆரம்பித்தது.
அசாமின் மேற்குப்பகுதியில் உள்ள கோக்ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் அடையாளம்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தினர். உடனடியாக ரோந்துப் போலீஸார் எதிர்தாக்குதல் நடத்தி அவர்களைஅங்கிருந்து விரட்டினர்.
தலைநகர் கவுஹாத்தி அருகே அசாம் கன பரிஷத் பூத் ஏஜன்ட் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால்கடத்தப்பட்டார்.
புதன்கிழமை இரவு கார்பி அங்க்லாங்க் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் அடையாளம் தெரியாதகும்பல் ஒன்று புகுந்தது. பின்னர் அங்கிருந்த தேர்தல் அதிகாரியைத் தாக்கி விட்டு வாக்குச்சீட்டுக்களைப் பறித்துக்கொண்டு தப்பியோடியது.
இதுபோன்று சிறு, சிறு வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்த போதிலும் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்துவாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு தொடங்கும் காலை 7 மணிக்கு முன்னரே பொதுமக்கள் வாக்குச்சாவடிக்குவந்து வாக்களிக்க ஆரம்பித்தனர்.
தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், அசாம் மாநிலத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாக்குச்சாவடிகளில்வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த வண்ணம் உள்ளனர். எந்தவித அசம்பாவிதச் சம்பவமும்நடக்காது என்று நம்புகிறோம் என்றார்.
அசாமில் மொத்தம் 1.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். மொத்தம் உள்ள 125 சட்டசபைத் தொகுதிகளில்907 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே, அசாமில் உல்பா தீவிரவாதிகள் தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பிரபின் போரா என்பவர் கூறுகையில், ஓட்டுப்போடுவது எனது பிறப்புரிமை.எக்காரணத்தைக் கொண்டும் நான் ஓட்டுப்போடாமல் இருக்க மாட்டேன். உல்பா தீவிரவாதிகளின்மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என்றார்.
அசாம் முதல்வர் பிரபல்ல குமார் மெஹந்தா கூறுகையில், இந்த முறை அசாம் மாநிலத்தில் அதிக அளவு மக்கள்மிகவும் ஆர்வத்துடன் ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.
மக்கள் அதிக அளவில் வாக்களிப்பது உல்பா தீவிரவாதிகளின் பலத்தைக் குறைக்கும் வகையில் இருக்கும். மேலும்மக்கள் அதிக அளவு வாக்களித்தால் அது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி என்றே கூறலாம் என்றார்.
அசாமில் பாஜக வேட்பாளர் ஜெயந்தா தத்தா சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அசாமில் மொத்தம் 125 தொகுதிகளில் தேர்தல் நடந்து வருகிறது.
பாதுகாப்பு தீவிரம்:
தேர்தலின்போது வன்முறை ஏற்படக்கூடாது என்பதால் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. 75, 000 போலீஸார், புறக்காவல் படை போலீஸார் ரோந்துப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 17, 600 வாக்குச்சாவடிகளில் 13, 000 வாக்குச்சாவடிகளில் உல்பா தீவிரவாதிகளால்ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
தீவிரவாதி சுட்டுக்கொலை:
அசாம் மாநிலத்தில் உள்ள கார்பி அங்லாங்க் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு தீவிரவாதி ஒருவரைப் போலீஸார்சுட்டுக் கொன்றனர்.
இந்த மாவட்டத்தில் உள்ள டோன்கமோஹா பகுதியில் ரோந்துப்போலீஸார் மீது கையெறி குண்டுகள் வீசிக்கொலை செய்ய முயன்ற போது இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடன் வந்த பிறர் காட்டுக்குள் ஓடி தப்பித்துவிட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications