அசாமில் 4 இடங்களில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவு
கவுஹாத்தி:
இந்தியாவில் பதட்டம் மிகுந்த வடகிழக்கு மாநிலமான அசாமில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே இருந்தது.வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுக்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட காரணத்தால் 4 வாக்குச்சாவடிகளில்மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உல்பா தீவிரவாதிகளின் மிரட்டலாலும், சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபிறகு ஏற்பட்ட வன்முறைச்சம்பவங்களாலும் மக்கள் ஓட்டுப்போடுவதற்கே அஞ்சினர் என்று கூறலாம்.
முதலில் மந்தமாக ஆரம்பிக்கப்பட்ட வாக்குப்பதிவு போகப்போக சூடு பிடிக்க ஆரம்பித்தது.
மாநிலம் முழுவதும் மிகவும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. புதன்கிழமை இரவு நடந்தது போன்ற தீவிரவாதிகொலை, பூத் ஏஜன்ட் கடத்தல், வாக்குச்சீட்டுக்கள் பறிமுதல் போன்ற அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும்நடக்கவில்லை.
தலைநகர் கவுஹாத்தியில் உள்ள நான்கு தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகஅளவில் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு நேர்மையாக, நியாயமாக நடக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தகாரணத்தால் வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே நடைபெறவில்லை.
முதல்வர் ஓட்டுப் போட்டார்:
அசாம் முதல்வர் பிரபல்ல குமார் மெஹந்தா தனது சொந்தத் ஊரான நாகயானுக்குச் சென்று ஓட்டுப் போட்டார்.
அசாமில் தேர்தல் நடந்த 125 தொகுதிகளில் மொத்தம் 907 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பிற்பகல் ஒரு மணி வரை அசாமில் 35 சதவீத வாக்குப்பதிவு நடந்தது. முதலில் மந்தமாக வாக்குப்பதிவுஆரம்பித்தாலும் போகப்போக வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி ஓட்டுப் போடுவதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டினர்.
மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு:
அசாமில் போன்கைகான் தொகுதியில் உள்ள நான்கு வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்போடுவதற்காகக் காத்திருந்தமக்களிடம் வாக்குச்சீட்டுக்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, அசாமில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஏப்ரல் 27 ம் தேதி வரை நடந்த வன்முறைச்சம்பவங்களில் பல கட்சிகளைச் சேர்ந்த 35 பேர் கொல்லப்பட்டனர். 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications