கருணாநிதி, மூப்பனார் ஓட்டு போட்டனர்
சென்னை:
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில்முதல்வர் கருணாநிதி தனது குடும்பத்துடன் வந்து ஓட்டுப்போட்டார்.
ஓட்டுப்போட்டுவிட்டு அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பேஇல்லை. சட்டசபைத் தேர்தல் மிகவும் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வெற்றி பெறும். பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்களால் கோளாறு ஏற்பட்டு வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுஅவரது தோல்வி பயத்தையே காட்டுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அறிவித்ததிலிருந்து அதைக் குறை கூறிவருகிறார் ஜெயலலிதா என்றார்.
கருணாநிதியுடன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் முரசொலி மாறனும் வந்து ஓட்டுப் போட்டார்.
கருணாநிதி போட்டியிடும் கடைசித் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வாக்குச்சாவடி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் ஓட்டுப் போட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மதச்சார்பற்றகூட்டணி அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணி எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று கேட்கிறார்கள்.எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று கணித்துக் கூற நான் ஜோதிடர் அல்ல என்றார்.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications