திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு
திருச்சி:
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால்ஓட்டுப்பதிவு ஆரம்பமாவதில் காலதாமதம் ஏற்பட்டது.
திருச்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு ஆரம்பமாவதற்கு முன்பே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துவாக்களிக்கத் தொடங்கி விட்டனர். வாக்குப்பதிவு தொடங்கும் நேரமான காலை 7 மணிக்கு முன்பே வாக்குச்சாவடிகளில் மக்கள்கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது.
திருச்சியில் பெண்கள் அதிக ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வருகின்றனர். அவர்களுடன் ஓட்டுப்போடத் தகுதியுள்ளஅவர்களது மகன், மகள்களும் வந்திருந்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு:
தில்லைநகர் கே.ஏ.பி.விஸ்வநாதம் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிவர இயங்காதகாரணத்தால் அங்கு வாக்குப்பதிவு ஆரம்பிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அங்கு 45 நிமிடம் காலதாமதமாக வாக்குப்பதிவுஆரம்பித்தது.
அங்குள்ள தேர்தல் அதிகாரிகளால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்ய முடியவில்லை. சுமார் அரை மணிநேரம் அவர்கள் முயற்சித்தும் பலனில்லாத காரணத்தால் உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு மின்னணுவாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டது.
மத்திய மின்துறை முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மரணமடைந்ததையடுத்து திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குஇடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications