அசாமில் கண்ணிவெடி வெடித்ததில் 5 வீரர்கள் பலி
கவுஹாத்தி:
அசாமில் கண்ணி வெடி வெடித்ததில் 5 புறக்காவல் படை வீரர்கள் கொல்லப்பட்டனர் என அரசு அதிகாரிகள்வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், தீவிரவாத இயக்கமான உல்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்வியாழக்கிழமை தேர்தல் அதிகாரிகளுக்கும், வாக்குப் பெட்டிகளுக்கும் காவலாக சென்று கொண்டிருந்த பாதுகாப்புபடையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் கவுஹாத்தியிலிருந்து 420 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் சோனாரி என்ற இடத்தில் நடந்தது.
கண்ணிவெடி வெடித்ததில் 3 எல்லை பாதுகாப்பு படையினரும், 2 அசாம் போலீசாரும் கொல்லப்பட்டனர். 3 பேர்பலத்த காயமடைந்தனர்.
தேர்தல் தினமான வியாழக்கிழமை அசாமில் பல்வேறு இடங்களில் உல்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11பேர் கொல்லபட்டனர். இதில் 7 பேர் புறக்காவல் படையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் உல்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.இவர்களில் திப்ருகார் பா.ஜ.க. வேட்பாளர் ஜெயுந்தா தத்தா என்பவரும் ஒருவர்.
தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி திப்ருகார் தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த தொகுதியைதவிர 125 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இது தவிர தேர்தலையொட்டி நடந்த வன்முறை சம்பவங்களில்180 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவங்களுக்கிடையிலும் வியாழக்கிழமை நடந்த தேர்தலில் 65 சதவிகிதம் பேர்வாக்களித்துள்ளனர் என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications