ரஜினி பெயர் ஏற்படுத்திய குழப்பம்
சென்னை:
நடிகர் ரஜினி காந்த் ஓட்டுப் போட வந்தபோது, அ.தி.மு.க தேர்தல் ஏஜென்டு திடீர் பிரச்சினையைக் கிளப்பினார்.இதனால் சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியது.
நடிகர் ரஜினி காந்த், தேர்தல் நெருங்கும் வரை மிகவும் அமைதியாக இருந்தார். தேர்தலில் யாருக்கு ஆதரவு என்றுகூட அவர் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் ஓட்டுப் போட வருவாரா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும்இருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் ரஜினி காந்த் ஓட்டுப் போட வந்தார். அப்போது பூத்தில் இருந்தஅ.தி.மு.க. ஏஜென்டு, கடந்த தேர்தலில் ரஜினி காந்த்தின் பெயர் வாக்காளர் பட்டியலில் சிவாஜி ராவ் என்றுஇருந்தது. இந்த தேர்தலில் அவரது பெயர் ரஜினி காந்த் என்று உள்ளது. எனவே ரஜினி ஓட்டுப் போடுவதைஅனுமதிக்கக் கூடாது என்று கூறினார்.
இதையடுத்து ரஜினியுடன் வந்திருந்த அவரது ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா குறுக்கிட்டு, வாக்காளர்அடையாள அட்டையில் ரஜினி காந்த் என்றுதான் உள்ளது என்று விளக்கினார்.
அப்போது தி.மு.க. ஏஜென்டு எழுந்து, அ.தி.மு.க ஏஜென்ட்டைப் பார்த்து, ரஜினி காந்த்தை உங்களுக்குத்தெரியாதா என்று சத்தமாக கேட்டார். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சில விநாடிகளுக்குப் பிறகுஅனைவரும் சமாதானம் அடைந்தனர். அதன் பிறகு ரஜினி ஓட்டுப் போட்டு விட்டு பறந்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications