கோவையில் 50,000 பேருக்கு ஓட்டுரிமை மறுப்பு
கோவை:
பொதுமக்கள் வாக்களிக்க எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் உதவினாலும், இந்த முறை வாக்கு இல்லை எனஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்களின் நிலை தான் பரிதாபமாக இருந்தது.
கோவை மாவட்டத்தில் ஓட்டுரிமை மறுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டும்.
வழக்கமாக ஒவ்வொரு தேர்தலிலும் விரலில் வைக்கப்படும் மை அழிகிறது. கள்ள ஓட்டுப் போட்டு விட்டார்கள்என்பது தான் பிரதானமாக இருக்கும்.
ஆனால், இந்த முறை வித்தியசமாக இருந்தது. எங்களது தெருவில் இருக்கும் எல்லோருடைய பெயரையும் நீக்கிவிட்டார்கள். 250 பேர் இதனால் ஓட்டுப் போட முடியவில்லை, எனது குடும்பத்தில் எனக்கு ஓட்டு உண்டு,எங்கப்பாவுக்கு உண்டு, அம்மாவுக்குத் தான் ஓட்டு இல்லை பாவம்.
ஏன் சார் என்னோட பெயரை நீக்கினீங்க? ஒவ்வொரு தேர்தலிலும் நான் தவறாமல் ஓட்டுப் போட்டு வருகிறேன்,அடையாள அட்டை வேறு கொடுத்திருக்கீங்க! என எல்லோரும் புலம்பினர்.
மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக வந்து மக்கள், எனக்கு ஓட்டுரிமை இல்லை என முறையிட்ட வண்ணம்இருந்தனர். கட்சி அலுவலகங்களிலும் மக்கள் உங்க கட்சிக்குத் தான் ஓட்டுப் போடலாம் என்றிருந்தேன். ஆனால்,எனக்கு ஓட்டே இல்லை என்று சொல்லி விட்டார்கள், நாங்கள் ஓட்டுப் போட முடியாதா? என்ற கேள்விக்கணைகள் வந்த வண்ணம் இருந்தன.
ஜனநாயகத்தில் வாக்களிக்க உரிமை இல்லாமல் போனமக்களின் புலம்பல், பல பத்திரிக்கை அலுவலகங்களையும்விட்டு வைக்கவில்லை. நாளைக்கு பேப்பரில் போடுங்கள் சார், என மக்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் சந்தானம் அவர்களைச் சமாதானப் படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார். இந்தமுறை உங்களது பெயர் நீக்கப்பட்டுள்ளது குறித்து விசாரிக்கிறோம். இப்போது ஒன்றும் கூற முடியாது. எனவே,அடுத்த முறைக்கு நீங்கள் வாக்களிக்க மனுச் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
வாக்குப்பதிவை பார்வையிடச் சென்ற அமைச்சரையும் வாக்காளர்கள் முற்றுகையிட்டு கெரோ செய்தனர். அவரதுகாரை மறித்து, ஓட்டுப்போட எங்களுக்கு வழிசொல்லி விட்டுப் போங்கள் என பிடித்துக் கொண்டனர். அமைச்சர்பழனிச்சாமி, இதனால் பதில் சொல்ல முடியாமல் திணறிப்போனார்.
பொள்ளாச்சிக்குச் சென்ற பத்திரிக்கையாளர்கள் வேனை சில பொதுமக்கள் மறித்து, எங்களுக்கு வாக்குரிமைதாருங்கள் எனக் கூறினர். மேலும், அவர்கள் ஓட்டுரிமை இல்லாத எங்களுக்கு எதுக்கு அடையாள அட்டை எனஆவேசப்பட்டு அட்டையைக் கிழித்துப் போட்டனர்.
இந்த வாக்குரிமை மறுப்பு குறித்து ஒரு தனியார் டிவியில் வந்த வாசகங்களைப் படித்த சிலரும் குழம்பிப் போயினர்.அடையாள அட்டையிருந்தும் வாக்களிக்க முடியாத மக்கள் கொதித்துப் போயினர்.
இதனால், ஓட்டுப்பதிவில் 5 முதல் 10 சதவீத வாக்குகள் குறைந்திருக்க வாய்ப்புள்ளது. இது குறித்து விசாரிக்கவேண்டும் என பொதுநல இயக்கங்கள் குரல் கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications