தமிழக தேர்தல் வரலாற்றில் மிகக்குறைவான வாக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ண்தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை மிகவும் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும்தேர்தல் நடந்த போதிலும் இந்த முறை மிகக்குறைவான சதவீத வாக்குகளே பதிவாயின என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக தேர்தல் வரலாற்றிலேயே மிகக் குறைவான சதவீத வாக்குகள் பதிவானது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலில்இந்த முறை மிகக் குறைவான சதவீத அளவுகளே வாக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்த தேர்தலைவிட இந்த முறை சட்டசபைத் தேர்தலில் அதிக அளவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்உபயோகப்படுத்தப்பட்டன.

1957 ம் ஆண்டு முதல் 1996 ம் ஆண்டு வரை சராசரியாக 60 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

நெருக்கடிகாலகட்டமான 1977 ம் ஆண்டு 61.56 சதவீத வாக்குகள் பதிவாகின. 1967 ம் ஆண்டு நடந்த தேர்தலில்மிகவும் அதிக அளவாக 76.59 சதவீத வாக்குகள் பதிவாயின.

1957ம் ஆண்டு - 63. 24 சதவீதம்

1967 - 76.59 சதவீதம்

1971 - 71.83 சதவீதம்

1977 - 61.56 சதவீதம்

1980 - 64.75 சதவீதம்

1984 - 73.44 சதவீதம்

1989 - 69.44 சதவீதம்

1991 - 63.83 சதவீதம்

1996 - 66.95 சதவீத வாக்குகள் பதிவாகின. முந்தைய ஆண்டுகளைப் பார்க்கும் போது இந்த வருடம் நடந்தசட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும் என்றார்.

முன்னதாக தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்பயன்படுத்தப்பட்டன. அதனால் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி இயங்குகின்றன?அவற்றைப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்ப்பதற்காகவே வாக்குச்சாவடிக்கு வந்திருந்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பதை பெரும்பாலான வாக்காளர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆங்காங்கே ஏற்பட்ட ஒரு சில வன்முறைச் சம்பவங்களைத் தவிர மிகப்பெரிய அளவில் பிரச்சனைகள் எதுவும்ஏற்படவில்லை.

இந்தத் தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்திருந்தும் கூட வாக்காளர்பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்த காரணத்தால் பல வாக்காளர்களால் வாக்களிக்க முடியாமல் போனதுதான்மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. பல தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன்திரும்பிச் சென்றனர்.

அக்னிநட்சத்திர வெயிலின் கொடுமை காரணமாகவும் பிற்பகலில் ஓட்டுப்போட வந்த வாக்காளர்களின்எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. மேலும் அனைவருக்கும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைவழங்காததாலும் மிகக்குறைவான சதவீத வாக்குகளே பதிவாயின என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+