"வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது
டெல்லி:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரித்துக்கொடுத்த நிறுனத்தினர் கூறியுள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் வியாழக்கிழமை நடந்தது. வாக்குப்பதிவுமுழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் இத்தேர்தலில்தான் நடத்தப்பட்டது.
67,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப்இந்தியாவலிருந்தும் (இ.சி.ஐ.), 67,000 வாக்குப்பதிவு இயந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக்கம்பெனி (பி.இ.எல்) நிறுவனத்திடமிருந்தும் தேர்தல் ஆணையம் வாங்கியது.
இந்த இரு நிறுவனங்களும் முன்னரே வாக்கு பதிவு இயந்திரங்களை தயாரித்துக் கொடுத்தன என்பதுகுறிப்பிடத்தக்கது. 1989ம் ஆண்டு 1,50,000 வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரித்து கொடுத்தன.
ஒரு இயந்திரத்தின் விலை ரூ 7,000 முதல் ரூ 8,000 வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை நடந்த சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுஏற்படட்டதால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமானது.
இதனால் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடிசெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் புகார் கூறப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை, வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்தவிதமானமோசடியும் செய்ய முடியாது என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரித்துக் கொடுத்த இருநிறுவனங்களும் கூறியுள்ளன.
இது குறித்து இ.சி.ஐ. மூத்த தொழில்நுட்ப அதிகாரி முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்,இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை மாற்ற முடியாது. ஒரு முறை வாக்கு பதிவுசெய்யப்பட்டுவிட்டால் அவற்றை எந்த விதத்திலும் மாற்ற முடியாது. இயந்திரங்கள் பொய்சொல்லாது.
இயந்திரங்கள் மீது சுத்தியல் போன்ற கடினமான பொருட்கள் விழுந்தால் இயந்திரங்கள் நொறுங்கிப்போகும் வாய்ப்பு உள்ளது. இயந்திரங்கள் மேசையின் மீது கீழே விழுந்தால் கூட இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் அழியாது.
பி.இ.எல். பொது மேலாளர் ஷர்மா கூறுகையில், 1989ம் ஆண்டு பல வாக்குப்பதிவு இயந்திரங்களைவிற்பனை செய்தோம். அப்போது நடந்த தேர்தலில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
இயந்திரங்களில் ஏற்படும் சிறு குறைகளை பொருட்படுத்தக்கூடாது. தவறுகள் 0.0005 சதவிகிதம்என்ற அளவில்தான் இருக்கும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பணத்தையும், காதிதத்தையும் மிச்சப்படுத்துகிறது. ஒவ்வொருதேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அதிக அளவிலான காகிதங்களைசெலவிட வேண்டியிருந்தது. இப்போது அது தேவையில்லை.
வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அனைத்து தேர்தல் முடிவுகளும் 24 முதல் 48மணி நேரத்திற்குள் வெளியாகிவிடும்.
சில தொழில்நுட்ப பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த இடமும் அவை கையாளப்பட்ட விதமும் கூட பழுது ஏற்படகாரணமாக இருக்கலாம்என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications