மதிமுக வேட்பாளரின் வீட்டுக்கு தீவைப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே வாக்குச்சாவடியில் ஏற்பட்ட தகராறில் மதிமுக வேட்பாளரின் வீட்டுக்குத் தீவைக்கப்பட்டது.
வியாழக்கிழமை மதுராந்தகம் அருகே உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மின்னணுவாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து அத்தொகுதி மதிமுக வேட்பாளர் ரவீந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் அதிகாரியிடம் மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரம் சரிவர இயங்கவில்லை என்று புகார் கூறுவதற்காகச் சென்றார்.
அப்போது ஒரு கும்பல் ரவீந்திரனின் ஆதரவாளர்களைத் தாக்க ஆரம்பித்தனர். இதையடுத்து இரு கும்பலுக்கும் இடையே தகராறுஏற்பட்டது.
இதையடுத்து, மதிமுக வேட்பாளர் ரவீந்திரனின் வீட்டுக்கு சிலர் தீவைத்தனர். இதையடுத்து அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் பலரைபோலீஸார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 20 க்கும் மேற்பட்டோரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications