ஊட்டியில் நாளை ரோஜா மலர் கண்காட்சி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

ஊட்டி ரோஜா நூற்றாண்டு பூங்காவில் ரோஜா மலர் கண்காட்சி சனிக்கிழமை நடக்கிறது.

இதுகுறித்து ஊட்டி ரோஜா சங்கத் துணைத் தலைவர் ஏ. கார்ணர் மற்றும் பூங்காவின் உதவி தோட்டக்கலைஇயக்குநர் ஏ.கே. மாதவன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டின் கோடை வாசஸ்தலங்களில் ஒன்றான ஊட்டியில், சீசன் காரணமாக மக்கள் கூட்டம் அதிகரிக்கஆரம்பித்துவிட்டது. வழக்கம்போல இந்த ஆண்டும் ரோஜா மலர் கண்காட்சியை நடத்த முடிவு செய்திருக்கிறோம்.

மே 12ஆம் தேதி சனிக்கிழமை இந்த ரோஜா மலர் கண்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர் மற்றும்ஊட்டியிலிருந்து வரவழைக்கப்படும் 100க்கும் அதிகமான ரோஜா மலர் வகைகள் இந்தக் கண்காட்சியில்வைக்கப்படும்.

ஜப்பானைச் சேர்ந்த ரோஜா மலர் அரங்குகள், ரோஜா மலர் கொத்துக்கள், ரோஜா சென்ட்டுகள், ரோஜா பட்டன்ஓல்ஸ் மற்றும் ரோஜாவிலிருந்து தயாரிக்கப்படும் பல வாசனைப் பொருள்கள் கண்காட்சியில் வைக்கப்படும்.

பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறுவர்களுக்கு 5 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றுஅவர்கள் கூறினர்.

மலர் கண்காட்சி

ரோஜா மலர் கண்காட்சியைத் தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே 19 மற்றும் 20ஆம் தேதிகளில்மலர் கண்காட்சி நடக்கவிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+