தேர்தலை புறக்கணித்த 4 கிராம மக்கள்
சேலம்:
சேலம் மாவட்டம் நொய்யமலை கிராமம் உள்பட 4 கிராம மக்கள் ஒரு ஓட்டுக் கூட போடாமல் தேர்தலைப்புறக்கணித்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நொய்யமலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண்கள் மற்றும்பெண்களுக்கு ஒரு பொது வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
இங்கு வாக்காளர்களாக 947 பேர் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 475 பேரும் பெண்கள் 472 பேரும் உள்ளனர்.இந்த கிராமத்திற்கு ரோடு வசதி, பஸ் வசதி, மின்சார வசதி உள்பட எந்த வசதியும் இல்லை. எனவே, தேர்தலைப்புறக்கணிக்க ஒட்டுமொத்தமாக முடிவு செய்தனர்.
வாக்குச் சாவடிக்கு அதிகாரிகள் சென்றும் அங்கு காலை முதல் மாலை வரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.
இதே போன்று ஈரோடு மாவட்டம், சின்னப்புத்தூர் கிராமம், தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூர் வத்தல்மலை, திருச்சிமாவட்டத்தில் பாலகிருஷ்ணன்பட்டி ஆகிய கிராமங்களில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை.
ஒரு வாக்கு மட்டுமே பதிவான வாக்குச்சாவடி
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியைச் சேர்ந்த புவணாசிப்பட்டி வாக்குச்சாவடியில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருபெண்தான் அந்த வாக்கைச் செலுத்தினார்.
புவணாசிப்பட்டி கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்ற காரணத்திற்காக, அந்தக் கிராம மக்கள்தேர்தலைப் புறக்கணித்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications