6 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
சென்னை:
தமிழகத்தில் ஆறு வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சனிக்கிழமை காலை 7 மணிக்கு இந்த ஆறு வாக்குச்சாவடிகளிலும் மறுதேர்தல் நடக்கிறது.
தமிழக தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேர்தல் முறையாக நடக்கவில்லையென்று தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கூறியபுகாரையடுத்து, தமிழகத்தில் ஆறு தொகுதிகளில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை துறைமுகம், அருப்புக்கோட்டை, வேலூர், திருவெரும்பூர், விழுப்புரம் மற்றும் தூத்துக்குடிதொகுதிகளில் உள்ள 6 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடக்கிறது.
வாக்குச்சாவடிகளில் நடக்கும் தேர்தல் தொடர்பான செய்திகளை மாவட்டக் கலெக்டரிடம் உடனுக்குடன் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.
வாக்குப்பதிவு எண்ணிக்கை ஏற்கனவே குறிப்பிட்டபடி, மே 13 ம் தேதி நடக்கும். அதில் எவ்வித மாறுதலும்இல்லை என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக, துறைமுகம் தொகுதியில் உள்ள செவன் வெல் வாக்குச்சாவடியில் சிபிஐ வேட்பாளர் பாண்டியனை திமுகதொண்டர்கள் தாக்கினர். அப்போது நடந்த வன்முறைச் சம்பவத்தில் இரண்டு அதிமுக தொண்டர்கள்காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் வாக்குப்பதிவு முடியும் சமயத்தில் நடந்தது. இச்சம்பவத்தில் ஒரு டாடா சுமோ வேனும் இன்னொருவாகனமும் அடித்து நொறுக்கப்பட்டன.
இச்சம்பவத்தில் பாண்டியனுடன் வந்திருந்த அதிமுக தொண்டர்கள் பலர் காயமடைந்தனர். சிபிஐ அதிமுககூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது.
இதே போல் சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தொண்டர் ஒருவர் திமுக தொண்டர்களால்அடித்துக் காயப்படுத்தப்பட்டார். அவரின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
அவர் பெயர் ஜாஃபர். இவர் உடனடியாக ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின்னர் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications