வாக்காளர்களை துரத்திய யானைகள்
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே காட்டுப் பகுதியில் வாக்களிக்க வந்தவர்களை யானைகள் துரத்தியது. இந்த சம்பவத்தில் 3பேர் காயமடைந்தனர்.
சத்தியமங்கலம் அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதி கிராமங்களில் யானைகள், குரங்குகள் உள்பட வனவிலங்குகள் அதிகம்.
இந்த பகுதியில் உள்ள காடகநல்லி, ஏலஞ்சி, பத்திரிபடுகு, சிக்கூர், அணைக்கரை, பசுவணாபுரம், ஆகியகிராமங்களுக்குப் பஸ்வசதி இல்லை.
இவர்களுக்கு ஓட்டளிக்க 15 கிமீ தூரத்தில் உள்ள மல்லியம் துர்க்கம் என்ற ஊரில் வாக்குச் சாவடிஅமைக்கப்பட்டிருந்தது. மிகவும் செங்குத்தான மலைப் பகுதியில் இந்த வாக்குச் சாவடிக்கு அதிரடிப்படையினரேஓட்டு இயந்திரங்களை எடுத்துச் சென்றிருந்தனர்.
பஸ் வசதியற்ற இந்த கிராம மக்கள், மலைப் பகுதிகளில் வாக்களிக்க நடந்து வந்து கொண்டிருந்தனர். உச்சி வெயில்நேரமாக இருந்ததால், அவர்கள் நடந்து வந்தபோது அங்கு தண்ணீரைத் தேடி ஒரு யானைக் கூட்டம் வந்துகொண்டிருந்தது.
இந்த யானைக் கூட்டம் வாக்களார்களைப் பார்த்ததும் அவர்களைத் துரத்த ஆரம்பித்தது. இதில் சிவப்பா, நாகப்பா,ராமக்காள் ஆகியோர் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்து அங்கிருந்த அதிரடிப்படையினர் விரைந்து சென்று யானைக் கூட்டங்களை வெடி வைத்துவிரட்டி வாக்காளர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை முறையாகச் செலுத்தினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications