கொளுத்தும் வெயிலுக்கு முதியவர் பலி
சேலம்:
அக்னிநட்சத்திர வெயிலின் உக்கிரம் தாங்காமல் சேலத்தில் முதியவர் ஒரு பலியானார்.
தமிழகம் முழுவதிலும் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடைகாலத்தில் மக்களைஅதிகமாக வாட்டும் அக்னிநட்சத்திரம் இந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. அது இந்த மாதம் 28ம் தேதி முடிகிறது.
அக்னிநட்சத்திரம் தொடங்கியது முதல் வெயிலின் கொடுமை மேலும் அதிகமாகியுள்ளது. வெயிலுடன் சேர்ந்துஅனல் காற்றும் வீசுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
காலை, மதிய நேரங்களில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். பெரும்பாலும் வீட்டை விட்டுவெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் சேலம் நகரில் அக்னிநட்சத்திர கொடுமைக்கு முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
சேலம், சீலநாயக்கன்பட்டி பைபாசிலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் 65 வயதுடைய முதியவர் நடந்து சென்றுகொண்டிகுந்தார். வெயில் அதிகமாக இருந்தாலும் அந்த முதியவர் நடந்து கொண்டே இருந்தார்.
நீண்ட தூரம் நடந்ததால் வெயிலின் கொடுமையை அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. வெயிலின் கொடுமைதாங்காமல் தீடீரென சாலையில் மயங்கி விழுந்தார்.
சிறிது நேரத்தில் அவர் அங்கேயே இறந்து போனார். இந்த தகவலை அங்கிருந்த மக்கள் அன்னதானப்பட்டிபோலீசுக்கு கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்கடர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பிணத்தை கைப்பற்றிவிசாரணை செய்தார்.
இறந்துபோன முதியவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications