வேட்பாளர் ஜீப் எரிப்பு .. வைகோ கண்டனம்
சென்னை:
மதிமுக வேட்பாளர் ஜீப் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதி மதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத். வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோது இவர் மீது சிலர் திடீர் தாக்குதலில் இறங்கினர். இதில் ரவீந்திர நாத்தின் ஜீப் தீவைத்துஎரிக்கப்பட்டது.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பவுஞ்சூர் வாக்குச்சாவடியில்மதிமுக சின்னமான பம்பரம் சின்னத்திற்கு எதிரே உள்ள நீல நிற பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என்றுவாக்காளர்கள் புகார் கூறியுள்ளனர். அதற்கு அந்த வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரி, வேறு ஏதாவது ஒரு பட்டனைஅழுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த வேட்பாளர் ரவீந்திர நாத், அங்கு சென்று தேர்தல் அதிகாரியிடம் பேசியுள்ளார். பின்னர்தேர்தல் கமிஷனிடம் புகார் செய்யப் போவதாக கூறி விட்டு வெளியே வந்துள்ளார்.
வெளியே நின்று அவர் தொண்டர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில், தேர்தல் தோல்வி ஜூரத்தில் இருந்தஆளுங்கட்சித் தொண்டர்கள் ரவீந்திர நாத் மீது கொலை வெறித் தாக்குதலில் இறங்கினர்.
இதில் ரவீந்திர நாத்தின் ஜீப் எரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்டுத் தர்பாருக்கு மே 13-ம் தேதி முடிவு கட்டப்படும்.இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications