அதிமுக சட்டசபைக் குழுத் தலைவராக ஜெ.ஒருமனதாகத் தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayalalithaஅதிமுக சட்டசபைக் குழுத் தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அருதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.

இதையடுத்து திங்கள்கிழமை காலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுக சட்டசபைக் குழுத்தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஜெயலலிதாவைத் தவிர யாரையும் அதிமுக சட்டசபைக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க மாட்டோம் என்று கூறினர்.

இதுவரை தமிழக முதல்வராகப் பதவியேற்கும்படி ஜெயலலிதாவை கவர்னர் பாத்திமா பீவி அழைக்கவில்லை.

ஜெயலலிதா தேர்தலிலேயே போட்டியிடக்கூடாது என்று அவரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அதிமுகஎம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதாவை அதிமுக சட்டசபைக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் திங்கள்கிழமை மாலைக்குள் ஜெயலலிதா கவர்னர் பாத்திமா பீவியைச் சந்திப்பார் என்று தெரிகிறது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+