அதிமுகவின் கோட்டையாக மாறிய கோவை
கோவை:
கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக மாறியுள்ளது. 7 மாவட்டங்களில் 59 தொகுதிகளில் இரண்டுதொகுதிகளை மட்டுமே அதிமுக விட்டுக் கொடுத்துள்ளது.
கடந்த தேர்தல் முடிவுகளை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்ட மக்களின் தீர்ப்பில், கொங்குமண்டலம், அதிமுகவின் கோட்டையாக மாறியுள்ளது. அலை ஏதும் வீசாத இந்த தேர்தலில் மக்களின் மவுனப்புரட்சியின் பின்னணி இந்த மண்டலத்தில் தெரிய வந்துள்ளது.
"அம்மா ஆட்சி காலத்தில் தினம் என்னுடைய பாக்கெட்ல 100 ரூபாய் இருக்கும், இப்போ, 10 ரூபாய் கூடஇல்லை எனப் புலம்பும் கூலித் தொழிலாளி கோவையில் அதிகம் உண்டு. உள்ளூர் அளவில் அன்றாடம்காய்ச்சிகளின் மனதில் உதித்த இத்தகைய காரணங்கள் மட்டும் அதிமுகவைத் தேர்வு செய்யக் காரணமாகஅமையவில்லை.
இப்பகுதியில் ஏற்பட்ட தொழில் வீழ்ச்சி, விளைபொருள் விலை வீழ்ச்சி ஆகியவை கூட பெரும் பாதிப்பைஏற்படுத்தியுள்ளது. "வியாபாரமே இல்லை, டல் என கூறுவது தான் அதிகமாகவே இருந்துள்ளது. ""அம்மாவின்ஆட்சி காலத்தையே" பொற்காலமாக கருதிய கொங்கு மண்டல மக்கள், அளித்த தீர்ப்பும் வியப்பிற்குரியதே.
நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட தேயிலை விலை வீழ்ச்சி, கோவை மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய் விலைவீழ்ச்சி, ஈரோட்டில் மஞ்சள் விலை வீழ்ச்சி, சேலத்தில், கிழங்கு விலை வீழ்ச்சி, ஈரோடு, தர்மபுரியில் கரும்புக்குகட்டுபடியாகத விலை என விவசாயிகள் மனதிலும் "வறட்சியை ஏற்படுத்தியதன் எதிரொலியும், கைத்தறிநெசவாளர்களின் தொழில் வீழ்ச்சியும் உள்ளூர் பிரச்னைகளும் கூட அதிமுக வெற்றிக்கு இந்தப் பகுதியில்காரணமாக அமைந்துள்ளது.
கொங்கு மண்டலத்தில் உள்ள தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, நீலகிரி ஆகிய 7மாவட்டங்களில் 59 தொகுதிகள் உள்ளன. இதில், தளி தொகுதியில் பாரதிய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி தனக்கு சீட் கிடைக்காததால்வெள்ளகோயில் தொகுதியில் அதிமுகவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் திமுக வென்றது. அதிக ஓட்டுவித்தியாசம் ஒன்றும் இல்லை. வெறும் 612 ஓட்டில் மட்டுமே திமுக வெற்றி.
இந்த தொகுதியில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்ட துரை ராமசாமி மட்டும் பெற்ற ஓட்டுகள் 32,024. இந்த ஓட்டுகள் அதிமுகவிற்கு கிடைத்திருக்க வேண்டியது. அதோடு துரைராமசாமியின் மகனும்சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
அவர் பெற்ற ஓட்டுகள் 1090. இந்த ஓட்டுகள் அதிகவிற்கு கிடைத்திருந்தால் கூட அதிமுக வெற்றிபெற்றிருக்கும். இந்தத் தொகுதி, அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் ஏற்பட்ட பாதிப்பு ஆகும்.
கொங்கு மண்டலத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக அமைச்சர்கள் ஒருவர் கூட வெற்றியைப் பார்க்கமுடியில்லை. கைத்தறித் துறை அமைச்சராக இருந்த என்.கே.கே. பெரியசாமி, சமூகநிலத் துறை அமைச்சராகஇருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், வீரபாண்டி ஆறுமுகம், பொங்கலூர் பழனிச்சாமி எனஎல்லோருமே ஒட்டு மொத்தமாக தோல்வியைத் தழுவி விட்டனர். மீண்டும் சீட் கிடைத்த 14 எம்.எல்.ஏ.,க்களும் கூடதோல்வி தான்.
மீண்டும் மீண்டும் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர்களுக்கே சீட் என்ற ரீதியில் திமுகவில் புது முகங்களுக்கு வாய்ப்புஅளிக்கப்படவில்லை.
இதனால் திமுகவிலேயே அதிருப்தி ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. அதோடு கொங்கு மண்டலத்தில் திமுகஉட்கட்சிப் பூசலும் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருந்தது. சாதிக் கட்சிகளுக்கு இடமளித்தது சமூகவேறுபாடுகளை உருவாக்கியது. ஒரு சாதிக்கு எதிரான சாதியும் அதிமுகவிற்கே ஆதரவளித்தனர்.
உதாரணமாக, இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டம் நடத்தி, குறிப்பிட்ட இனத்தவரிடம் வெறுப்பைச்சம்பாதித்துக் கொண்டவர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.
இவரது அணியிலேயே கொங்கு நாடு மக்கள் கட்சி இருந்தாலும், அவருக்கு அது எதிரியாகவே செயல்பட்டுள்ளது.எனவே, குறிப்பிட்ட இனத்தினர், பிற இனத்தவர்களுக்கு எதிராக அரசியல் ரீதியாக பார்க்காமல், சமூக ரீதியாகவேஎதிர்ப்புத் தெரிவித்தது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications