நீலகிரியில் தாமதமாக முடிவு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
எமகண்டத்தில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேட்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஒரு மணி நேரம்தாமதாக நீலகிரியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வென்றது. இங்கு ஓட்டு எண்ணிக்கைஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு முடிந்தது.
அதிமுக கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் முடிவுகளை அறிவிக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால்முடிவுகள் அறிவிக்கப்படுவதை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.
பகல் 12 முதல் 1.30 மணி வரை எமகண்ட நேரம் முடிந்த பிறகுதான் முடிவு அறிவிக்கப்பட்டது. பகல் 1.35மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே திருப்தியுடன் சென்றனர் வென்ற வேட்பாளர்கள்.












Click it and Unblock the Notifications