ஜெயலலிதாவை முதல்வராக்குங்கள்: கவர்னருக்கு வாழப்பாடி வேண்டுகோள்
சென்னை:
தமிழகத்தில் அதிமுக அருதிப்பெரும்பான்மை பெற்றுள்ளதால், ஜெயலலிதாவை முதல்வராகப் பதவியேற்க கவர்னர் பாத்திமா பீவிஅழைக்க வேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து வாழப்பாடி ராமமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாது என்று அவரதுவேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் அதிமுக அருதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
மேலும் ஜெயலலிதா முதல்வராக ஆவதற்குத் உள்ள தடைகளை நீக்கி விட்டு அவரை முதல்வராகப் பதவியேற்க கவர்னர்பாத்திமா பீவி அழைக்க வேண்டும்.
கவர்னர் பாத்திமா பீவி சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி. அவர் அரசியல் அமைப்புச் சட்டங்களில் உள்ள நுணுக்கங்கள் அனைத்தையும்அறிந்தவர். இதனால் ஜெயலலிதாவை, முதல்வராகப் பொறுப்பேற்க கவர்னர் பாத்திமா பீவி அழைக்க வேண்டும்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கவர்னருக்கு அனுப்புவதுடன் தேர்தல் ஆணையத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டது.
தற்போது ஜெயலலிதாவை முதல்வராகப் பொறுப்பேற்க கவர்னர் அழைக்க வேண்டும். இந்தத் தேர்தலில் மக்கள் அளித்துள்ளதீர்ப்பை கருணாநிதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications